பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் மனிதன் பூக்குந் தாவரங்களே மிகப் பழங்காலந்தொட்டு அறிந்து வந்தான். உணவுக்கும், மருந்துக்கும், உடைக்கும் தாவரங்கள் இன்றியமையாதன. இதன் பின்னர்த் தாவரங்கள் குடியிருப்பு வசதிக்கு வேண்டப்படும் என்பதையும் உணர்ந்தான். புல், பூண்டு, செடி, கொடி, மரம் எனத் தாவர சங்கமத்தைத் தொல்காப்பியர் முதலான நமது முன்னேர்கள் பிரித்தறிந்தனர். கிரேக்க அறிஞர்களில் சிலர் தாவரங்களே முறையாக அறிந்தன. ராயினும், பிளேனி (Pliny) என்பவர்தாம் முதன்முதலாகத் தாவரங் களேப்பற்றி இயற்கை வரலாறு ஒன்று எழுதினர். உரோமானியர் களில் டயாஸ்கோரிடிஸ் (Diascorides) பதிருைம் நூற்றண்டில் ஆண்டிரியா சிசல்பினே (Andrea Caesalpino), ஜான் கிரார்டு (John Gerard) முதலியோர் தாவர அறிவைத் துாண்டிவிட்டனர். பதினேழாம் நூற்றண்டில் பாகின் (Bauhin) 5000 தாவரங்களைப் பற்றிப் பெரிய நூல் எழுதினர். ஜான் ரே (John Ray) 1703-ல் கிட்டத்தட்ட 18,000 தாவரங்களேப்பற்றி நுணுகி அறிந்து பல உண்மைகளே வெளிப்படுத்தினர். 1707-ல் ஸ்வீடன் நாட்டில் பிறந்த கரோலஸ் லின்னேயஸ் (Carolus Limnaeus) என்பவர் உயிர்நூலறிவிற்கும், சிறப்பாகத் தாவர உலகிற்கும் செய்துள்ள தொண்டு அளவிடற்கரியது. தாவரப் புலவர்கள் அவரைத் தாவரத் தந்தை எனப் போற்றுவர். பூக்குந் தாவரங்களே இக் காலத்தில் மிகுதியாக உள்ளன. விதை மூடாத் தாவரங்கள் தட்ப நாடுகளில் அதிகம். தாவ ரங்களே எல்லாம் அவர் பல பகுதிகளாகப் பிரித்துப் பெயரிட்டார். அப் பெயர்களே பலவற்றிற்கு இன்றும் வழங்கப்படுகின்றன. எனினும், அவரது பாகுபாட்டிற்கு இயற்கையுண்மைச் சான்றுகள் நிறுவப்படவில்லே. அவர் பெயரமைத்த முறைமட்டும் பெருஞ் சிறப்புடையது.