பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 221 லின்னேயஸ் (Limnaeus) தாவரங்களேயெல்லாம் 24 வகை யாகப் (klass) பிரித்து 1732-ல் வெளியிட்டார். 1787-ல் எழுதிய அவரது ஜீன ரா பிளான்டாரம் (Genera Plantarum) 935 பிரிவுகளே (genera) விரித்துரைக்கும். அவர் பூவின் தாதிழைகளே அடிப் படையாகக் கொண்டு, தாவரப் பாகுபாட்டை அமைத்தார். அவை பின் வருமாறு : கிளாஸ் 1. (klass I) மானன்டிரியா (monandria). ஒரு தாதிழை உடையன - லெம்னு (lemina). கிளாஸ் ......டயாண்டிரியா (diandria) இரு தாதிழை உடை யன - சால்வியா (salvia). கிளாஸ் 10. ......டெக்காண்டிரியா (decandria) பத்துத் தாதிழை களே உடையன - ஏசர் (acer). கிளாஸ் 13. ......பாலியாண்டிரியர் (polyandria) பல தாதிழைகளே உடையன - அல்லிப் பூ (nymphaea). கிளாஸ் 19. ......சிஞ்செனிசியா (syngenesia) - சூரியகாந்தி (heli anthus). கிளாஸ் 20. ...... 6ɔɔ sɛɔ6ợrtą-fuur (gynandria) - <aobř 66řb (orchis). கிளாஸ் 24. ...... கிரிப்டோகாமியா (cryptogamia). பாசி, காளான், பாசம், பெரனே. இப் பாகுபாடு தாவர அமைப்பில் காணப்படும் வேறுபாடு களேக்கொண்டு எழுந்ததேயன்றி, தாவரங்களில் உள்ள ஒற்றுமை களே க்கொண்டு இயற்கையான பாகுபாடு ஆகாது. எனினும், அவரது 19ஆம் வகை மட்டும் இயற்கையானது. இன்றும் அதை அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அதனுடன் பல தாவரங் களின் (1336 பிரிவுகள்) அமைப்பைத் தெளிவாக எடுத்துரைத்த முதல்வர் அவர்தான். 18ஆம் நூற் றண்டில் இயற்கை முறையான தாவரப் பிரிப்புகளே ஒழுங்குபடுத்தியவர்கள் டி ஜஸ்சியு (De Jussieu) ; tq- str6ör (31–írói (De Candole) முதலியோர். 19ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த பென்தம் (Bentham), ஹாக்கர் (Hooker) இருவரும் 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்துப் பெரு நூல் (1857) எழுதி வெளியிட்டனர். 1875-ல் எங்க்ளர் (Engler) என்ப வரும் பிரான்டில் (prantl) என்பவரும் தாவரங்கட்கெல்லாம் சிறந்ததொரு பாகுபாடு வகுத்தனர். 1915ஆம் ஆண்டில் பென்தம், ஹாக்கர் இவர்களைப் பெரிதும் தழுவி பெஸ்ஸி (Bessy) என்பவர் மிக அருமையான பாகுபாட்டை