பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தாவரம்-வாழ்வும் வரலாறும் வகுத்தார். இது உள்ளது சிறத்தல் என்னும் பரிமைக் கொள் கைக்கு ஏற்றதாக உள்ளது. பூக்கும் தாவரங்களில் குழாய்கள் (vessels) காணப்படு கின்றன. ஒன்று அல்லது இரண்டு உறைகளால் குல் மூடப் பட்டிருக்கும். இதுவே கரு அணுக்களின் கலப்பால் பின்னர் வித்தாகவும், அச் சூலகமே கனியாகவும் முதிர்கின்றன. ஆன்ஜியோஸ்பர்ம் (angiosperm) என்றது, கிரேக்க மொழி அடிப் படையில் குழாயுள்ள வித்துத் தாவரம் என்பதாகும். இவற்றுள் ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தாவரங்கள் இக்காலத்தில் நம் மண் உலகில் பரவி உள்ளன. கிட்டத்தட்ட 300 தாவரக் குடும் பங்களில் இவை அமைக்கப்பெறும். நீரில் மிதந்து வளரும் உல்ஃபியா)wolfia)போல நுண்ணிய தாவரம் முதல், ஆஸ்திரேலியா விலும் நீலமலையிலும் வாழும் மிகப் பெரும் யூகலிப்டஸ் (eucalyptus) torth oustor பலப்பல உருவில் இவ்வகைத் தாவரங்கள் இருக்கின்றன. பூக்குந் தாவரங்களே ஒரு விதையிலேயெனவும், இரு விதையிலே யெனவும் பாகுபடுத்தி அறிவது வழக்கம். பெஸ்ளி (Bessy) இத் தாவரங்களின் உள்ளது சிறந்து விரிந்த உண்மை நெறியைத் (evolution) (பரிமை அமைப்பை) தமது தோன்றுமுறைப் படத்தில் ஒருபுறம் ஒருவிதையிலேத் தாவரங் களும் மற்ருெரு புறம் (பெரும் பகுதி) இரு விதையிலேத் தாவரங் களுமாக விளக்கியுள்ளார். பரிணும முறையில், வழிவழிக் கொள்கைப்படி இரு விதையிலேத் தாவரங்களில் மிகப் பழமையான ரானேலிஸ் (ranalis) தொகுதியிலிருந்து, ஒரு விதையிலேத் தாவரங்கள் தோன்றி இருக்கவேண்டும் என்று முடிவாகக் கூறுவர். எங்க்ளர் (Engler), ஆர்பர் (Arber) முதலியோர் ஒரு விதையிலேத் தாவரங்கள் முற்பட்டவை எனக் கருதிர்ைகள். ஏறக்குறைய 34000 இனமாக (species) உள்ள இவை 2000 பிரிவுகளில் (genera) 36 குடும்பங்களாகப் பயிலப்படும். இருவிதையிலேத் தாவரங்கள் ஏறக்குறைய 260 குடும்பங்களாகப் பகுக்கப்பட் முள்ளன. இப் பகுதியில் ஏறக்குறைய 1,66,000 இனங்கள் உள்ளன. மனித அறிவின் எல்லேயைத் தொட்டு நிற்கும் லின்னேயஸ் பாகுபாட்டில் ஒவ்வோர் உயிர்ப் பொருளுக்கும் இரண்டு பெய ருண்டு. ஒன்று பிரிவுப் பெயர் (generic name), மற்றென்று இனப் பெயர் (specific name). பல பிரிவுகள் சேர்ந்து ஒரு குடும்பம்