பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 223 (family) எனப்படும். பல குடும்பங்கள் சேர்ந்து கணம் (order) எனவும், பல கணங்கள் சேர்ந்து தொகுதி (phylum) எனவும் கூறப்படும். குடும்பப் பெயர்கள்-ஏ சி (aceae) என்ற முடிவையும், உட் கனம் (sub-order) இனே (ineae) என்ற முடிவையும், கணங்கள் ஏலிஸ் (-ales) என்ற முடிவையும், தொகுதி, பைட்டா (phyta) என்ற முடிவையும் பெற்றிருக்கவேண்டும். உதாரணமாக, மிளகாய்ச் செடிக்குத் தாவரப் பெயர் காப்சிகம் இண்டிகம் (capsicum indicum) ஆகும். காப்சிகம் - பிரிவுப் பெயர். இண்டிகம் - இனப் பெயர். இதன் ஆங்கிலப் பெயர் சில்லி (chilly) ஆகும். இது சோலனேசி (solanaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. மிளகாய்க்குள்ள இப் பெயர்களேயே உலகில் எவ்விடத்தும் ஏற்றுக் கொள்வர். சந்திர மண்டலத்திற்கோ அல்லது சூரிய மண்டலத் திற்கோ சென்ருலும் அங்கெல்லாம் மிளகாய்க்கு இப் பெயரே வழங்கப்படும். அதன் குடும்பப் பெயரும் மாருது. இம் முறை அனேத்துலகத் தாவர அறிஞர்களால் வகுக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளவும்படுகின்றது. 1. கத்தரிச் செடியைச் சொலானம் மெலாஞ்ஜீன (solanum melangena) என்பர். சொலானம் பிரிவில் சுண்டை (solanum torvum), unoor&áó* rof (solanum nigrum), » G&râ áupiüg; (solanum tuberosum), @&o operaf (S. xanthocarpum), grzeuår (S. trilobatum), B6voru – šis ž; 5/f (S. indicum) op zestuu6oo6ai o-ststr@. எல்லாம் சோலனே சீக் குடும்பத்தைச் சேர்ந்தவை. வேண்டு மால்ை இதைக் கத்தரிக் குடும்பம் என்று சொல்லலாம். சிலர் இதை மிளகாய்க் குடும்பம் என்பர். இவ்விரண்டையும் அறியாத வர்கள் உருளேக்கிழங்கை எந்தக் குடும்பத்தில் சேர்ப்பது என மயங்குவர். 600 35u8%ou h (nicotiana tobacum) o II n,35609g5u h (datura fastulosa) சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆகவே காப்சிகம், சொலானம், நிகோடியான, டாத்துாரா முதலான பல பிரிவுகள் இக் குடும்பத்தில் உள்ளன என்று அறியலாம். ஊமத்தை இனத்தில் சில வகைகள் இருக்கின்றன. வெள்ளே ஊமத்தை, கரு ஊமத்தை, மலே ஊமத்தை ஆக இம் மூன்றும் ஊமத்தை இனத்தைச் சார்ந்தவை. ஆயினும், ஒவ் வொன்றும் ஒவ்வொரு மருந்துக்குப் பயன்படுவதாலும், ஒன்றிற் கொன்று வெளி அமைப்பிலேயே வேறுபட்டு இருப்பதாலும் இவற்றை வேறுபடுத்தித் தெரிந்துகொள்ளுதல் அறிவியலுக்குப் பொருந்தும்.