பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரம் தாவர உயிர் விளக்கத்தை பாட்டனி' என்ற சொல்லால் குறிப்பிடுவர். Botane’ என்ற கிரேக்க மொழிச் சொல் செடி’ என்று பொருள்படும். தாவரம் என்பது, இக் காலத்தில் நமது கண்ணுக்குப் புலப்படும் மரம், செடி, கொடி முதலியவை மட்டுமே யன்றிக் கண்ணுக்குப் புலகைாமல் மிக நுண்ணியனவாக உள்ள ஆயிரக்கணக்கான நுண்மங்கள், பாசி, காளான், பெரணே முதலான தாவர உயிர்களேயும்பற்றி விவரித்தறிவதாகும். பொதுவாகத் தாவர அறிவு மூன்று வகையானது. அவை, தாவர அமைப்பியல் (Morphology), தாவரக் குடும்பவியல் (Taxonomy), தாவரச் செயலியல் (Physiology) எனப்படும். தாவர அமைப் பியல் என்பது தாவரங்களின் வெளித்தோற்ற அமைப்பைப் பற்றியது. ஒரு செடியில் உள்ள இலே, பூ, காய், கனி, தண்டு, வேர் முதலியவற்றைப் புறத்தில் காணப்படுமாறு அறிந்து கொள்ளும் தாவரப் பகுதி. இதனே வெளியமைப்பியல் (external morphology) எனலாம். தாவர உறுப்புகளே நீட்டுவாக்கிலும் குறுக்காகவும் அறுத்து உள் அமைப்பைப் பார்த்தறிவது உள் ளமைப்பியல் (internal morphology) எனப்படும். தாவர உயிர்கள் அனைத்தையும் நுணுகியறிந்து, அவற்றிற்கெல்லாம் அவைகளின் அமைப்பிற்கேற்பக் குடும்பம் குடும்பமாக ஒழுங்குபடுத்தித் தாவர உயிர்களே அறிவிக்கும் பகுதியே தாவரக் குடும்பவிய’லாகும் (systematic botany). ஏனேய உயிர்களைப் போலத் தாவரங்களும் சுவாசித்தல், வளருதல், சீரணித்தல், இனத்தைப் பெருக்குதல் ஆகிய செயல்களைச் செய்துவருகின்றன. அன்றி வேறு உயிர் களால் செய்யமுடியாத உணவாக்குதல் ஆகிய ஒரு செயல் பச்சைத் தாவரங்களால்தான் செயற்படுகின்றது. அதுவே தாவரத்தின் சிறந்த பிறப்புரிமை. உலகில் உள்ள நீர், கரிவளி இவற்றைச் சூரிய சக்திகொண்டு தமக்கெனச் சொந்தமாக அமைந்துள்ள பச்சையத்தால் உயிர்கள் எல்லாம் உட்கொள்வதற்கு வேண்டிய சர்க்கரைப் பொருளே ஆக்கிக்கொள்ளும் இயல்பு