பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 233 தண்டும் வேரும் : யூரியேல் (euryale) ஓராண்டுச் செடி. அல்லி, தாமரைகள் நிலத்தண்டின் வளர்ச்சியால் பல்லாண்டு வாழ்வன. சிறு வேர்கள் நிலத்தண்டில் உண்டாகின்றன. இலைகள் : மாறி அமைந்த தனி இலேகள் நீரின்மேல் மிதந்து கொண்டிருக்கும். இலேக்காம்பு மிகவும் நீளமானது; அடியில் முட்கள் நிறைந்து, இலேயின் நடுவே பொருந்தியிருக்கும். நீரில் அமிழ்ந்துள்ள கேபம்பாவின் (cabomba) இலேகள் பல பிரிவுகளே யுடையன ; காம்பில்லாதன. விக்டோரியா ரீஜீயா இலேகள் 3 முதல் 6 அடி வரை அகன்றுள்ளன. இலே விளிம்பு மேற்புறமாக மடிந்துள்ளது. வட்டவடிவும் முட்டை வடிவும் உள்ள இலைகளின் மேற்புறத்தில் இலேத்துளேகள் உள்ளன. இணரும் பூவும் : பூக்கள் தனித்துப் பூவடிச் செதிலின்றி நீண்ட பூக் காம்புகளில் நீர்ப்பரப்பின்மேல் வெளிப்பட்டுத் தோன்றும். பூக்கள் மிகப் பெரியவை; பல தளச் சமச்சீரும், கண்கவர் நிறங்களும், நல்ல மனமும் உடையவை. அல்லி : இருமுறை மூன்றடுக்கானவை. கேபம்பாய்டியே (cabomboideae) பகுதியிலும், 4-5 அடுக்கானவை நிம்பே யாய்டியே (nymphaeoideae) பகுதியிலும், எண் அளவற்றவை; நிலம்போய்ைடியே (nelumbonoideae) பகுதியிலும் காணப்படும். பூவின் மேற்புறத்திலுள்ள அல்லிவட்டத் தனித்த இதழ் (anterior sepal) மொட்டின் வெளிப்புறத்தில் பிற புற இதழ்களேச் சேராமல் தனிப்பட்டு அமைந்துள்ளது. இதைப் பூக்காம்புடன் இனேந்து வந்து வெளிப்பட்ட பூவடிச் செதில் (adnate bract) எனக் கூறுவது முண்டு. புல்லி ; இதழ்கள் எண்னற்றவை ; நீண்டும் அகன்றும் பலநிறம் பெற்றும் தனித்தனியாக இருக்கும். 3 முதல் பல இதழ்கள் சுற்றடுக்காக உள்ளன. நியூ ஃபார் (nuphar) பூவில், இதழ்கள் சிறுத்துச் செதில் போன்று இருக்கின்றன. இதழ்களின் அடியில் தேன் சுரப்பிகள் காணப்படும். ஆணாகம் : தாமரை முதலியவற்றில் புல்லிவட்டத்தின் உட்புற அடுக்குகள் தாதிழைகளாக மாறியிருப்பதும் உண்டு. 3-6 தாதிழைகள் கேபம்பாய்டியே பகுதியிலும், அளவுகடந்தவை மற்றவைகளிலும் வட்ட அடுக்காகவும் சுற்று வட்டமாகவும் பூவடியில் பொருந்தியுள்ளன. தாதுப் பை உட்புறம் வெடிக்கும். இழைக்காம்பு தாதுப் பைகளுக்கு மேல் சற்று நீண்டுள்ளது.