பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தாவரம்-வாழ்வும் வரலாறும்

@RACAം ു് படம் 98. கப்பாரிடேசி (ஆதண்டைக் குடும்பம்) வேளை மலரும், பாகங்களும் பெண்ணகம் : இரண்டு சூல் இலேகளேக்கொண்ட ஓரறைச் சூலகம். சுவரொட்டு (parietal) முறையில் சூல்கள் இரு வரிசை யாகப் பொருந்தியிருக்கும். சில பூக்களில் குலகம் பல்சூலிலேச் சூலகம்போலக் காணப்படும். இவற்றில் போலிச் சுவர்கள் தோன்றிச் சூலகத்தை முற்றிலும் தடுக்காமல் ஓரறைச் சூலகமாக இருக்கச் செய்யும். சூல்கள் வளைந்தவை. பூக்களில் உள்ள பூவடி நீண்டு இருப்பதால் அல்லி புல்லி அடுக்கங்கள் அடியிலும், மற்றவை மேலும் பிரிந்து தோன்றும். இப் பூக்கணுவிடை-ஆண்பெண் அடுக்கத் தாள் (androgynophore) எனப்படும். இதைப்போல ஆனகத்திற்கும் பெண்னகத் திற்கும் இடையில் உள்ள பூக்கனுவிடை பெண்ணகத் தாள் (gynophore) Gr6©i 'il ©ib (l il–lħ 98). கனி : வெடிக்கும் விதைப் பை போன்ற இக் கனிகள் சிலிக்குவா (siliqua) எனப்படும். முற்றிய கனியில் கனிச்சுவர் இரண்டாகப் பிளந்து, மேலிருந்து அடிவரை வெடித்துப் பிரியும். பிரியும்போது கனியின் இருபுறத்திலும் உள்ள இழைபோன்ற சட்டங்கள் விதைகளேத் தாங்கி நிற்கும். இதனை ரிப்ளம் (replum) என்பர். ஆதண்டை முதலியவற்றில் சதைக் கனியும் காணப் படுகின்றது.