பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 237 3, Čiurf(31–3 (Capparidaceae) ஆதண்டைக் குடும்பம் இக் குடும்பம் 46 பிரிவுகளும் 700 இனங்களும் கொண்டது : வெப்பமான நாடுகளில் பரவியுள்ளது. <bggiorsol - (capparis horrida); Birirá, B(Bg5 (cleome viscosa); Gsustir (gynandropsis pentaphylla); soapst (cadaba indica); una, restria, tog lh (crataeva religiosa) gp3,63u6oo6u தென்னட்டில் காணப்படுகின்றன. இயல்பு: இக் குடும்பத்தில் நாய்க்கடுகு போன்ற சிறு செடிகளும், மகாலிங்க மரம் போன்ற சிறு மரங்களும், ஆதண்டை போன்ற கொடிகளும் உள்ளன. இல : தனித்த அல்லது கூட்டு இலைகள் தண்டில் ஒன்று விட்டு மாறியமைந்திருக்கும். உலேயடிச் செதில் சில தாவரங் களில் உண்டு. இவை, ஆதண்டையில் இருப்பதுபோல முட்களா கவும், சுரப்பிகளாகவும் மாறி இருக்கும். வேளை, நாய்க்கடுகுச் செடிகளில் பசைநீர் சுரக்கும் துாவிகள் செடி முழுதும் இருக் கின்றன. இ&லகள் தனித்தும் 3-9 வரை சிற்றிலைகள் சேர்ந்த கூட்டிலேகளாகவும் காணப்படும். மஞ்சரி : பூக்கள் தனியாகவும், துனிவளர் பூங்கொத்திலும் இருக்கும்; பெரிதும் இருபாலானவை ; ஒழுங்கானவை ; பூவடிச் செதில் உள்ளவை ; பூவுறை (perianth) இரு வட்டங்களில் ஆனது. சில பூக்களில் புல்லிவட்டம் இல்லே. அல்லி : 4 முதல் 8 வரை இருக்குமாயினும், பொதுவாக 4. புறவிதழ்களே உள்ளன. புல்லி : 4 அல்லது அதிகமானது. 4 புல்லிகள் உள்ள பூவில், பூவின் மேற்புறம் இரண்டும் அடிப்புறம் இரண்டுமாக அல்லியுடன் மாறி இருக்கும். ஆனகம் : 4 முதல் பல தாதிழைகள் காணப்படும். ஆனக மூலம் நான்காகத் தோன்றி, ஆருகப் பிரிந்து இருக்கும். சில பூக்களில் இவை நான்கும் பலபடியாகப் பிளந்து, பல தாதிழைகள் உண்டாகும். இவ்வாறு தாதிழைகள் பிரிந்து பெருகுவதைக் கொரிசிஸ் (chorisis) என்பர். கிளியோம் டெட்ராண்ரா (cleome tetrandra) பூவில் 4 தாதிழைகள் உள்ளன.