பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 239 விதைகள் பட்டையானவை ; அல்லது குண்டிக்காய் வடிவின; முளே சூழ் தசையற்றவை; op&r 5sG (embryo) Gluiflu 1 தாகவும் பலவாறு மடிந்தும் இருக்கும். ஆனக முன் முதிர்வு காரணமாகப் பிற மகரந்தச் சேர்க்கை, பூச்சிகள் மூலம் நிகழ்கின்றது. பயன் : கப்பாரிஸ் ஸ்பைனேசாவின் (capparis spinosa) உலர்ந்த மொட்டுகள் மெடிடெரேனியன் பகுதிகளில் கேப்பர்ஸ் (capers) என்ற ஊறுகாயாகவும், ஆதண்டை, வேளே, விழுதி முதலியவை மருந்துக்கும் பயன்படுகின்றன. கிளியோம் ஸ்பைனேசா (cleome spinosa) அழகான பூவிற்காகத் தோட்டங் களில் வளர்க்கப்படும். இக் குடும்பம் குரூசிஃபெரே (cruciferae) எனும் கடுகு குடும் பத்துடன் மிக்க தொடர்புடையது. கட்டிஃபெரே (Cuttiferae) புன்னைக் குடும்பம் இது வெப்ப நாட்டில் காணப்படும் ஒரு குடும்பம். இதில் 35 பிரிவுகளும் 400 இனங்களும் உள்ளன. சிறு மரங்களும், மரங்களு மாக உள்ள இவற்றில் பிசின் போன்ற ரெசின் (resin) சாறும் எண்ணெய்ச் சுரப்பிகளும் இருக்கின்றன. l இ8ல : தனி இலே ; எதிர் அல்லது வட்ட அடுக்காக அமைந் துள்ளது. இலேயடிச் செதில் அற்றது ; நுனி வளராப் பூந்துனரும் குடை மஞ்சரியும் மிகுத்துக் காணப்படும். பூ : பூக்கள் ஒருபாலானவை. இரு பாற் பூக்களும் காணப் படும். பூவடிச் சிறு செதில்கள் பெரியனவாகிப் புல்லியுடன் நெருங்கி இருப்பதால், இரண்டையும் வேறு பிரித்து அறிதல் எளி தன்று. பூவடி, பொதுவாகக் குவிந்திருக்குமெனினும், பல வடிவாக இருப்பதுண்டு. பூக்கள் ஒழுங்கானவை ; வட்ட அடுக்காகவும் சற்றுத் திருகு அடுக்காகவும் இருக்கும். சூலக மேலானவை. புல்லி : 2-10 இதழ்கள் விளிம்பு தழுவிய அமைப்பானவை. அல்லி : 4-12 இதழ்கள் விளிம்பு தழுவிய அமைப்பிலும் திருகு அமைப்பிலும் உள்ளன.