பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவிற்கு ஒத்தவண்ணம் பலரும் ஏற்றுக்கொண்டுள்ள தாவரப் பகுதிகள் பின்வருமாறு : தாவரம் தாலோபைட்டா காரோபைட்டா பிரையோபைட்டா டெரிடோபைட்டா ஸ்பர்மடோபைட்டா Thallophyta Charophyta Bryophyta Pteridophyta Spermatophyta தட்டைத்தாவரங்கள் காராத்தாவரங்கள் பாசத்தாவரங்கள் பெரணைத்தாவரங்கள் விதைத்தாவரங்கள் தாலோபைட்டா (Thallophyta - தட்டைத் தாவரம்) ஆங்கிலத்தில் தாலஸ் (thallus) என்ற சொல் தாலாஸ் (tholos) என்ற கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து தோன்றியது. இதற்கு வேர், தண்டு, இலை இல்லாத தாவரம் என்று பொருள், தாலோபைட்டா என்ற தொகுதி யில் நான்கு பகுதிகள் உள்ளன, அவை : I. பாசிகள் (algae) II. காளான்கள் (fungi) III. நுண்ம ங்கள் (bacteria) IV. லைக்கன் ('ichen) I. பாசிகள் பாசிகளில் ஆறு குடும்பங்கள் உள்ளன. இவற்றில் பச்சையம் (chlorophyll) எனப்படும் பச்சைப் பொருளும் சில நிறமிகளும் அமைந்துள்ளன.