பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 தாவரம்-வாழ்வும் வரலாறும் நமது நாட்டில் வலம்புரி (helicteres isora), குதிரைக்காய் மரம் (a, Tou6m th - sterculia foetida), 6)litavô] (pterospermum). கோக்கோ (theobrama cocoa) முதலியவை வளர்கின்றன. இலேகள் தண்டைச் சுற்றிலும் ஒன்றுவிட்டு ஒன்ருக அமைந் துள்ளன. தனியிலே அகன்று கையன்ன நரம்பு அமைப்புடையன. கூட்டிலேகளும் கையன் ன பிளவுகளே ப் பெற்றிருக்கும். இலேயடிச் செதில் முன்னுதிர்வன. இலேக்க க்கத்தில் உள்ள நுனிவளராப் பூங்கொத்து சற்றுச் சிக்கலானது. பூக்கள் பெரிதும் இருபா லானவை. ஒரு மரத்தில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித் தனியாக உண்டாவதைக் கோலா (cola) மரத்தில் காணலாம். பூக்கள் ஒழுங்கானவை; பலதளச் சமச்சீர் உடையவை. ஒருபுறச் சமச்சீர் உள்ள பூக்களும் காணப்படும். o அல்லி : 3-5 நேர்தழுவிய இதழ்கள் அடியில் சற்று இனேந் திருக்கும். புல்லி : 5 தனித்த இதழ்கள் சிறியவை ; சில பூக்களில் புல்லி இருப்பதில்லே ; சிலவற்றில் அடியில் இதழ்கள் இனேந்தாற்போல் தோன்றும். ஆணகம் : 5 முதல் பல தாதிழைகள் இரு அடுக்கங்களாக இருக்கும். தாதிழைகள் குழாய் வடிவில் இனேந்து ஒரு தொகுதி யாகியும், தனித்தனியாகவும் இருப்பதுண்டு. புற அடுக்கத்தில் உள்ள தாதிழைகள் பெரிதும் கேசரப்போலியாக (staminodc) இருக்கும். தாதுப் பைகள் இரண்டும் நீட்டுவாக்கில் பிளக்கும். பெண்ணகம் : 4 - 5 சூலிலேச் சூலகம் 4 - 5 சூலறைகளே யுடையது; இரண்டு முதல் தலேகீழான பல சூல்கள் அச்சொட்டு முறையில் காணப்படும் ; ஒருபுற வெடிகனிகள் ஐந்தும் ஒரு கொத்தாகத் தொங்குவதைக் குதிரைக்காய் மரத்திலும், கனியுறை வலமாகச் சுருண்டு இருப்பதை வலம்புரியிலும், சதைக் கனிகள் அடிமரத்தில் தொங்குவதைக் கோக்கோ மரத்திலும் பார்க்கலாம். விதைகள் முளே சூழ் தசையையும், நேரான அல்லது வளைந்த முளேக் கருவையும் பெற்றிருக்கும். பயன் : கோக்கோ (theobroma cocoa) விதைகளிலிருந்து கோக்கோ, சாக்லேட் (chocolate) கிடைக்கிறது. கோலா (col: acuminata) மரக்கொட்டைகளே உ ட ம் பு வலி வாங்குவதற்க, ஆப்பிரிக்க மக்கள் பயன்படுத்துகின்றனர். காஃபீன் (colicin) பொருள் இதில் அதிகமாக இருப்பதால் இதன் விதையுறையைப் பொடித்து கோலா என இந்நாளில் பலரும் உபயோகிக்கின்றன . வலம்புரி, இடம்புரி (helicteres isora) கனிகள் மருந்துக்கும் பயன் படுகின்றன.