பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 100. டீ லியேசி (புரு முட்டிக் குடும்பம்) டீ லியா மலரும், பாகங்களும் பயிரிடப்படுகின்றன. உலகிற்கு வேண்டிய சணல் நமது நாட்டி லேயே உண்டாகின்றது. திரிகோணமலே மரம் (berrya ammomilla) இலங்கையில் அதிகம் எனினும் நம் நாட்டிலும் வளர்கின்றது ; மரம் மிக வலுவானது. லிண்டென் (linden) எனப்படும் உலியா (tilia americana) மரம் மெதுவாகவும் உறுதியாகவும் இருப்பதால் வேலேப்பாடுகள் நிறைந்த கருவிகள் செய்வதற்கும் பயன்படு கின்றது. டிஸ்கிஃபுளோரே (disciflorae) என்ற பகுதியில் உள்ள தாவரங் களில் தாதிழைகள் பொதுவாகக் குறிப்பிட்ட எண்ணிக்கை உடையவை; இவற்றிற்கு அடியில் சூலகத்திற்கு வெளியில் தேன் சுரப்பி காண்ப்படுகின்றது. இது பெரும்பாலும் வட்டமாக இருக்கும் ; சிறு சுரப்பிகளாகப் பிரிந்தும் இருக்கும் ; தாதிழைகளின் அடிக்கு உள்ளும் புறமும் காணப்படும். இச் சுரப்பியின் தட்டு, அல்லது வளேய வடிவத்தைக்கொண்ட இப்பகுதி டிஸ்கிஃபுளோரே என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் உள்ள குடும்பங்கள் சிலவற்றை இங்கு அறிவோம். (51” (31–3 (Rutaceae) எலிமிச்சைக் குடும்பம் இக்குடும்பம் வெப்ப நாடுகளிலும் மித வெப்பமான இடங் களிலும் பரவியுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்டிரேலியா நாடு களில் அதிகமாக உள்ளது. இதில் 140 பிரிவுகளும், 1300 இனங் களும் உள்ளன. நமது நாட்டில் எலிமிச்சை (citrus limonum),