பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 249 படம் 102. மீ லியேசி (வேம்புக் குடும்ரும்) வேம்பு மலரும், பாகங்களும் மரங்கள் நன்கு வளர்கின்றன. இலே 3 முதல் பல சிற்றிலேகளே யுடைய கூட்டிலேயாகும் ; இற கன்ன அமைப்புடையது. இலேயடிச் செதில் இல்லே. பூந்துணர் : நுனிவளராப் பூந்துனர், அல்லது கலப்பு மஞ்சரியாக இலேப்பக்கத்தில் உண்டாகும் ; பூக்கள் இரு பாலானவை ; சமச்சீர் உடையன ; புல்லியில் 4-5 அகவிதழ்கள் திருகிக் தழுவி இருக்கும். ஒருசில பூக்களில் 3-3 அகவிதழ்கள் இருப்பது முண்டு. ஆணகம் : 8-10 தாதிழைகள் ஒரு தொகுதியாக இருக்கும் ; மெல்லிய சவ்வு ஒன்றில்ை தாதிழைகள் இணைக்கப்பட்டு வட்டத் தொகுதி நிமிர்ந்து நிற்கும். இதனடியில் உட்புறமாக வட்டவடிவ முள்ள சுரப்பி காணப்படும். பெண்ணகம் : சூற்பை மேலானது ; ஒவ்வொரு சூலறை யிலும் இரு சூல்கள் பொதுவாக இருக்குமாயினும், ஸ்வைடீனி யாவில் (swietenia) 12 காணப்படும். சூல்முடி உருண்டையாகவும், பிளவுபட்டும் இருக்கும். கனி: ஒரு விதையுள்ள தசைக் கனியாகவும் வெடி கனி யாகவும் இருக்கும். விதைகளில் முளே சூழ் தசை சதைப் பற்ருனது.