பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 251 படம் 103. அனகார்டியேசீ (முந்திரிக் குடும்பம்) மா மலரும், பாகங்களும் களும் தாது விளேக்கும். ரூஸ் (rhus) பூக்களில் ஐந்து இழைகள் மட்டும் உள்ளன. அனகார்டியம் (anacardium) பூக்களில் 10.7 இழைகளிருக்குமாயினும், ஒன்றில்தான் தாது விளேகிறது. மாம் பூவில் 5 இழைகள் உளவாயினும், ஒன்று மட்டும் நீண்டு வளர்ந்து தாது விளேத்து நிற்கும். i. பெண்ணகம் : உயர்வுச் சூலகம் ; 1 அல்லது 2 முதல் 6 சூலிலேகள் ; பொதுவாக மூன்று சூலிலேகள் உளவாயினும், ஒன்றில் மட்டும் விதையுண்டாகும். புக்களுளிையாவில் 5 சூலிலே களிருக்கின்றன. ஒரு விதைதான் முற்றுகின்றது. மா, முந்திரி களில் ஒரே ஒரு சூலிலேதான் காணப்படுகிறது. உள்ளோட்டுத் தசைக் கனிகள் பெரிதும் காணப்படும். முந்திரியின் பூத்தண்டும் பூத்தளமும் பருத்து சதைக் கனியாகிறது. இது போலிக் கனியே யாம். இதன் உண்மைக் கனி ஒரு கொட்டையாகி போலிக் கனிக்கு மேலே வெளிப்பட்டிருக்கிறது. இதன் புறத்தோலில் ஓர் எண்ணெய் உண்டாகிறது. விதையில் முளே சூழ் தசையில்லே. முளேக் கரு சற்று நேராகவோ வளைந்தோ இருக்கும். uuusör: 6ul — e^16) uniflé 4, tré)?gNo16irgit et56ñ» (rhus taxicodendron) நச்சு மரம் எனப்படும். ஜப்பானில் வளரும் ரூஸ் (rhus vernicifera) இனமொன்றில் பொன்னிற வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது. முந்திரிப் பருப்பு நமது நாட்டிலிருந்து வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது ; நல்ல சத்துள்ளது. மாங்கனியும் அங்ங்னமே.