பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 104. மைமோசாய்டியே (தொட்டாற் சிணுங்கிக் குடும்பம்) தொட்டாற் சிணுங்கி மலரும், பூச்சித்திரமும் இணர் : கிரமஞ்சரியும் (capitulum) காம்பில்லா மஞ்சரியும் காணப்படும். பூ : ஒழுங்கானது (regular) ; இருபுறச் சமச்சீரானது ; ஐந்தடுக்கானது ; பெரிதும் இருபாலானவை. பூவடிச் செதில் சிறியது; விரைவில் உதிர்ந்துவிடும்; பூவடிச் சிறுசெதில் காணப்படின் மிகச் சிறியதாக இருக்கும். புல்லி : மணி வடிவமானது ; நான்கு அல்லது ஐந்து இதழ்கள் விளிம்பொட்டியும் தனித்தும் இருக்கும். ஆணகம் : அல்லி, புல்லி வட்டத்தின் எண்ணிக்கையும் அவற்றைப்போல இரு மடங்காயும் அளவு கடந்தும் தாதிழை களேக் கொண்டிருக்கும். அக்கேசியா பிரிவில் எண்ணற்ற தாதிழைகள் தனிததனியே இருக்கும். இங்கியே (ingeae) பிரிவில் எண்ணற்ற அவை அடியில் ஒன்ரு ய் இணேந்திருக்கும். தாதிழை நீளமானது. இரு தாதுப் பைகளே நுனியில் பெற்றிருக்கும் தாதுக்கள் இணேந்து சிறுசிறு உருண்டைகளாகத் தோன்றும். நீண்ட தாதிழைகள் மலரில் வெளிப்பட்டுத் தோன்றுதலின் மஞ்சரி கண்கவர் வனப்புடையதாக இருக்கின்றது.