பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 255 பெண்ணகம் : ஒரிலேச் சூலகம் ; ஓரறையுடையது ; சூல்பை மேலானது. சூல்தண்டும் தாதிழை போன்றதே. கனி : வெடியாக் கனியும், வெடி கனியும் காணப்படும். துரங்குமூஞ்சியின் காய் சதைப்பற்றுடையது. வாகை வெண் னெற்று ஒலித்தலேப் பாலேப் பாடல்கள் விரித்துக் கூறும். வாகை மரத்தில் இலைகளின்றிக் கனிகள் மட்டும் இருப்பதுண்டு. கரு வேலன், கொறுக்காய்ப்புளி, யானைப்புளி முதலியவற்றின் கனிகளே லோமென்டம் (lomentum) என்பர். இவற்றில் விதைகள் சாதா ரனமாக உதிர்வதில்லே. கொறுக் காய்ப்புளியின் விதையைப் பெரிதும் மூடிக்கொண்டு ஒரு இனிய சதைப்பற்று இருக்கும். இதனைப் பத்திரி (aril) என்பர். விதைகளில் முளே சூழ் தசையுடை யனவும் இல்லாதனவும் உண்டு. விதையிலே பட்டையானது. வேலன் மரங்களில் எல்லாம் இலேயடிச் செதில்கள் (stipules) இரு முட்களாக மாறியிருக்கின்றன. முள் வேலமரத்தில் இவை மிகப்பெரிய முட்களாகப் பருத்து உட் கூடுகொண்டு இருப்பதால் எறும்புகள் இவற்றினுள்ளே வாழ்ந்துவருகின்றன. இங்ங்னம் குடியிருக்க உதவும் வேலமரத்தின் இளங் கொழுந்துகளே உண்ண வரும் சிறு பூச்சிகளே எறும்புக் கூட்டம் கொன்று தின்று, அண்டி வாழ்ந்து நன்றி செலுத்தும் இயல்பினே மிர்மிகோகோரி (myrmechochory) srsört uiř. பயன் : சைலியா (xylia) மரம் மிக்க உயரமானது. கட்டட வேலேக்குதவும் வேலமரங்கள் விறகுக்கும், பயிர்த் தொழிலுக்கு வேண்டிய கருவிகளுக்கும், அரிவாள், கோடரி, கொடுவாள் முதலிய வற்றிற்குக் காம்பிடவும் பயன்படுகின்றன. தாவரங்கள் ஒரறி உயிரினம் என்பதைத் தொட்டாற் சிணுங்கி வலியுறுத்துகின்றது. இ&லக்காம்பின் அடியில் சற்றுப் பருத்துள்ள பல்வைனஸ் (pulvinus) பகுதியே இவை சிணுங்குதற்குக் காரணமாம். அங்கு உள்ள உயிர் அணுக்களில் உண்டாகும் அமுக்க மாறுதலின் காரணமாக இலேகள் சுருங்குகின்றன; பின்னர் விரிகின்றன. ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பர். ஆலமரத்தின் பாலும் கருவேலன் மரத்தில் உள்ள துவர்ப்பும் நமது பற்களுக்கு உறுதி பயக்கும். வேலமரத்திலுள்ள டானின் (tannin) என்ற துவர்ப்புப் பொருள் பற்களைத் துலக்கும். அக்கேசிய செனிகால் (A. senegal) வேலமரப் பிசினேக்காட்டிலும் நல்ல பிசின் தருகின்றது. மரத்தின் உயிரணுக்கள் சிதைந்து பிசிகை வெளிப்படுகின்றது.