பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 257 படம் 105. சிசல்பினய்டியே (கொன்றைக் குடும்பம்) தகரை மலரும், பாகங்களும் H கொண்ட மரத்தை ஜூடாஸ் மரமென்பர். அதன் தாவரப் பெயர் fi staño (cercis siliquastrum) gróðrt i gy. @th lor:#496ör i b &#356ïr அவரைப்பூக்களேப்போன்று நீண்டு, ஆனக, பெண்னக உறுப் புகளே உட்கொண்டிருக்கும். பூக்குந் தாவரங்களிலேயே மிகுந்த அழகுடையது அம்ஹெர்ஸ்டியா நொபிலிஸ் (amherstia nobilis), @ 5∨, orator ords (queen of flowering plants)orsor Liff. சில ஆண்டுகட்குமுன் பர்மா நாட்டிற்கு கவர்னராக வந்த ஒரு வெள்ளேயரின் மனைவிக்கு அம்ஹெர்ஸ்ட் (Amherst) என்று பெயர். அந்த அம்மை தவப் பேரழகியாம். அதல்ை, அவர் பெயரை இந்த மலருக்கிட்டனர். இச் சிறுமரம் பங்களுர் தாவரத் தோட் டத்தில் அழகொழுக மலர்ந்து வளர்கிறது. இதன் அடியிதழ்கள் இரண்டும் மிகக் சிறியனவாகவும், மேல் இதழ்கள் மூன்றும் மிகப் பெரியனவாகவும் உள்ளன. கிரமேரியா (krameria) பூவில் அடி இதழ்கள் இரண்டும் அருகிப்போய் சுரப்பிச் செதில்களாக (glandular scales) மாறியிருக்கின்றன. புளியம்பூவில் இவை யிரண்டும் முற்றிலும் காணப்படவில்லே. கோப்பி பெரா (copaijera), செரடோனியா (Ceratonia) பூக்களில் அகவிதழ்கள் அனைத்தும் இல்லாது போகின்றன. கொன்றை, மந்தாரை முதலியவற்றில் அழகிய அகன்ற இதழ்களாகக் காணப்புடும் புல்லிவட்டம் செர டோனியாவில் அற்றுப்போவதையும், இடையில் இவை சிறிது சிறிதாகக் குறைந்து மாறி அருகிப் போவதையும் உற்று நோக்கில்ை, ஒர் இயற்கை உண்மை நெறி (evolution-பரிணுமம்) தன் போக்கில் இவ்வாறெல்லாம் செய்கிறது என்பது புலனுகும். தா-17