பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 தாவரம்-வாழ்வும் வரலாறும் கூட்டிலேயும் உண்டு. இலேயடிச் செதில்கள் இரண்டும் கலியான முருங்கையில் நன்கு தெரியும். சில சமயங்களில் இலே, முள்ளாக மாறிவிடுவதும் உண்டு. நீலமலையில் வளரும் யூலெக்ஸ் (Ulexeuropa.eus) செடியில் இலேகளும் கணுக்குருத்தில் வளர வேண்டிய இலேகளுடன் முட்களாக மாறிவிடுகின்றன. எனினும் இம் முட்கள் தண்டைப் போலப் பச்சையாக இருந்து இஃலத்தொழிலே மேற் கொள்கின்றன. பட்டாணியில் இலே நுனிபற்றுக் கம்பியாக மாறி இருக்கும். மஞ்சரி : நுனி வளர் தனி மஞ்சரியே பெரும்பாலும் உள்ளன. கலப்பு மஞ்சரியும் தனிப் பூக்களும் அருகிக் காணப்படும். பூ : ஒரு புறச் சமச்சீரானது; இதுவே இக் குடும்பத்தின் தனிச் சிறப்பாகும் இருபாலானது ஐம்பகுதி உடையது. அல்லி : ஐந்து புறவிதழ்கள் அடியில் இணைந்து, மேலே ஐந்து விளிம்புகள் இருக்கும். சிலவற்றில் மேலிதழ்கள் இரண்டும், ர்ே இதழ்கள் மூன்றும் இணைந்து ஈருதடு உடையதாகக் காணப்படும். புல்லி : ஐந்து அக இகழ்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் வேறுபட்டிருக்கும். அடி இதழ்கள் இரண்டும் சற்று இணைந்து படகிதழாகவும் (keel), பக்கத்து இதழ்கள் இரண்டும் தனித்தனி இறக்கை இதழ்களாகவும் (wing), மேற்புறத்தில் உள்ள இதழ் மிகவும் அகன்று, கொடி அல்லியாகவும் (standard) இருக்கும். இவற்றுள் கொடியல்வி நல்ல நிறம் பெற்றுக் கண்கவரும் இயல் புடையது. நிறங்கண்டு மயங்கி வண்டுகள் இப்பூவிடம் ஈர்க்கப் படுகின்றன. வரும் வண்டுகள் தங்குவதற்கு இறக்கை இதழ்கள் உள்ளன. பெரிதும் படகிதழில் ஆனகம், பெண்ணகம் இரண்டும் உள்ளடங்கி இருக்கும். புல்லிவட்டம் கீழ் தழுவிய அமைப்பு 2–65) Lil 135 (d.cscendingly imbricate). Gil- so 6 unifo, 35To di Gorgjun அமோர்பாவில் (Amorpha) இறக்கை இதழ்களும் படகிதழ்களும் இல்லே. ஆணகம் : பத்துத் தாதிழைகள் தனித்தும், அடியில் இணைந்தும், ஒரு கற்றையில் ஒரேமாதிரியாகவும், ஒன்று விட்டு ஒன்று பெரியதாகவும் இருக்கும். உளுந்து, பயறு முதலியவை களில் ஒன்பது இழைகள் ஒன்ருகவும், ஒரிதழ் தனித்தும், இரு கற்றையாக (diadelphous) இருக்கின்றன. பெண்ணகம் : ஒரறை ஒரிலேச் சூலகம் பல சூல் உடையதாக இருக்கிறது. சூல்தண்டு மெல்லிய துாவியுடையது.