பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 26.1 கனி : இருபுற வெடிகனியே மிகுதியும் உண்டு. விதைகளில் எல்லாம் விதைத் தழும்பில் வெண்மையான பத்திரி சிறிது காணப் படும். விதையுறை இரு கூருனது; விதையின் வெளியுறை (testa) சற்று அழுத்தமானது இதில் உள்ள உயிர் அணுக்கள் நான்கு அடுக்காக உள்ளன ; புறத்து இருப்பன நீளமானவை ; மிக நெருக்க மாகவும் அமைந்துள்ளன. லிக்னின் என்ற வேதிப் பொருளால் உயிரணுச்சுவர் தடிப்பேறி இருக்கும். விதைத் தழும்பின் உட்புற மாக, சிறிய, ஆல்ை, சவ்வுபோன்ற சதைப்பற்று (tracheid bar) ஒன்று உண்டு. முளேக் கருவில் (embryo) உள்ள முளே வேர் (radicle) சற்று உள் வளர்ந்திருக்கும். மகரந்தச் சேர்க்கை : இக் குடும்பத்தில் பிற மகரந்தச் சேர்க்கையே பெரிதும் காணப்படுகின்றது. " தாதுண் பறவை ’க்கும், 'கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’க்கும், பூவரிய மது நுகரும் பொறிவரிய சிறு வண்டிற்கும், மகரந்தத்தை ஏற்ற முறையில் வெளிப்படுத்துவதை முல்லர் (Muller) என்பவர் இக் குடும்பத்தில் மட்டும் நான்கு வகை யுண்டென்பர். வேர்க் கடலேப் பூ நிலத்தின் மேலே உள்ளது. பிற மகரந்தச் சேர்க்கை முடிந்தவுடன் பூக்காம்பு கீழ்நோக்கி வளர்ந்து மண்ணிற்குள் புகும். அங்கே கருமுதிர்ந்து காய்க்கும். இதனே நிலத்திற் கருவுறல் (geocarpy) என்பர். கலியான முருங்கையில் பிற மகரந்தச் சேர்க்கை, காக்கைகளால் நிகழும் என்பதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. பயன் இக் குடும்பம் மிகப் பயனுடையது. மக்களின் உணவுக்கு இன்றியமையாத சத்துப் பொருள்களே க் கொண்ட பல பருப்புச் செடிகள் இதில் உள்ளன. துவரை, கடலே, பட்டாணி, உளுந்து, பயறு, காராமணி, அவரை, பீன்ஸ், கொத்தவரை, வேர்க் கடலே முதலியன உணவுப்பொருள்கள் ஆகும். அவுரிச் செடியிலிருந்து முன்னனில் நீலச் சாயம் எடுக்கப்பட்டது. நரிப் Liu , p1, 6lintą 3 r(3 sir (Medicago), Gluc 68Gaori_6řo (Melilotus) முதலியவை ஆடு மாடுகளின் உணவிற்குப் பயிரிடப்படுகின்றன. செஸ்பேனியா கிளிரிசிடியா (Gliricidia) தழை உரமாக்கப் பயிர் செய்யப்படும். இக் குடும்பத்தைச் சார்ந்த பல செடிகளின் வேர்கள் சிறு முடிச்சுகள் (modules) உண்டாக்கும். அவற்றுள் பாசில்லஸ் (Bacillus radicicola) grošr so solor goorfiich gir (bacteria) is topogograms நைட்ரோஜென் (nitrogen) வளியை சேமித்துவைக்கும். இவ்வளி செடிகள் செழித்து வளரப் பயன்படும். நெல்லறுத்த வயல்களில் உளுந்து, பயறு முதலிய இக் குடும்பத்துச் செடிகளே விதைத்து, அவற்றையும் அரிந்தெடுத்துக்கொண்டு, வேர்களே மட்டும் நிலத்தில் விட்டுவைப்பர். இவ் வேர்களில் நைட்ரோஜென்வளி