பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 263 ஆட்டிக்கொண்டிருக்கும். இதுவும் தொட்டாற் சிணுங்கிபோன்று இலேக்காம்பின் அடியிலுள்ள உயிரணுக்களில் உண்டாகும் அமுக்க மாற்றத்தால் நிகழுமென்பர். குதிரை உணவிற்கு வேண்டிய கொள் (dolichos bitorus) வடநாட்டில் பயிராகின்றது. குன்றிச் (aprus) செடியில் பலவகை உள்ளன. அவற்றின் வெளியமைப்பியல், உள்ளமைப்பியல், வண்ணத்துண்டியல், செயலியல் முதலியவற்றை நன்கு ஆய்ந்து இவையனைத்தையும் வெண் குன்றி, செங்குன்றி எனப்பிரித்து, செங்குன்றிக்கு, ஏப்ரஸ் பிரிகடோரியஸ் (abrus precatorius) என்ற பழம் பெயரையும், வெண் குன்றிக்கு ஏப்ரஸ் லூகோஸ்பர்மஸ் (abrus leucospermus srin) என்ற புதுப் பெயரையும் சட்டப்படி சூட்டி ஆராய்ச்சி செய்துள்ள இந் நூலாசிரியர் தொண்டு சிறந்ததென்பர். இம் மூன்று சிறு குடும்பங்களில் தொட்டாற் சிணுங்கிக் குடும்பம் பண்டையதெனவும், அவரைக் குடும்பம் நன்கு சிறந்து பரிணமித்ததெனவும் கூறுவர். மரங்களாக மலிந்திருத்தல், ஒழுங்கான பூவுடைமை முதலியவை பண்டைத் தாவரங்களிற் காணப்படும் இயல்பு. செடிகளாக நிறைந்திருத்தல், ஒருபுறச் சமச்சீரான பூக்களே உடைமை சிறந்து பரிணமித்த பண்புகள் ஆகும். ஆதலின், பண்டைத் தாவர இயல்புகள் தொட்டாற் சிணுங்கிக் குடும்பத்திலும் சிறந்து விரிந்த பண்புகள் அவரைக் குடும்பத்திலும், இவை யிரண்டுங்கலந்த பண்புகள் மயிற் கொன்றைக் குடும்பத்திலும் உள்ளவாறு காண்க. (3) II (3+6' (Rosaceae) ரோஜா குடும்பம் இக் குடும்பத்தில் 113 பிரிவுகளும், 1200 இனங்களும் உள்ளன. உலகம் முழுவதும் பரவி, கிழக்காசியாவில் மிகுதியாகவும், அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் பரவலாகவும் வளர்கின்றன. இவற்றுள் மரங்களும் புதர்களும் செடிகளும் கொடிகளும் உள் ளன. இலை : பெரிதும் இறகன்ன கூட்டிலைகள் சுற்றுவட்டமாக அமைந்துள்ளன. தனி இலேகளும் உண்டு. இலேயடிச் செதில்கள் காம்பை யொட்டியனவாகக் காணப்படும்.