பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 தாவரம்-வாழ்வும் வாலாறும் படம் 108. மிர்ட்டேசீ (நாவல் குடும்பம்) கொய்யா மலரும், பாகங்களும் ஆணகம் : பல தாதிழைகள் உள்ளன ; தாதுப்பைகள் அடி ஒட்டியவை ; உட்புறம் வெடிக்கும்; இணேப்பு நன்கு தோன்றும், நுனியில் சுரப்பி யிருக்கும். பெண்ணகம் : பொதுவாகச் சூற்பை தாழ்வானது ; பாதி தாழ்வானதும் உண்டென்பர் ; 2-5 சூல் இலே ஒரறைச் சூலகமும் மூன்று முதல் ஐந்து சூல் இலேச் சூலகமும், 3-5 அறைச் சூலகமும் காணப்படும். சுவர் ஒட்டு முறையில் 3 சூல் தசைகளில் பல சூல்கள் இருக்கும். அச்சு ஒட்டு முறையில் அறைக்கு இரண்டு சூல்கள் இருப்பதுமுண்டு. படம் 109. மிர் ட்டேசீ (நாவல் குடும்பம்) + காலிஸ்டிமன் மலரும், பாகங்களும்