பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 273 படம் 111. அம்பெலிபெரே (மல்லிக் குடும்பம்) வல்லாரை மலரும், பாகங்களும் பூக்களும் இருபாற் பூக்களும் இருப்பதுண்டு. சில செடிகள் பால் வேறுபாடு உட்ைடயன. அவை ஆண் பூக்களேயுடைய மஞ்சரியையாவது, 6) L16স্টেr பூக்களையுடைய மஞ்சரியையாவது பெற்றிருக்கும். பூ: இருபுறச் சமச்சீரானவை; ஐந்தடுக்கானவை; ஒழுங்கா னவை; பூவுறை அல்லியாகவும், புல்லியாகவும் பிரிந்தேயுள்ளது. குலகக் கீழானவை. அல்லி : 5 இதழ்களும் சூலகத்தை ஒட்டியிருக்கும்; மேல் விளிம்பு ஐந்தாகப் பிளவுபட்டிருக்கும். புல்லி : 5 தனித்த இதழ்கள்; இதழ் விளிம்பு உட்புறமாக வளைந்திருக்கும். ஆனகம் : 5 தாதிழைகள் மொட்டில் உள்ளே மடிந்திருக்கு மாயினும் மலரில் விரிந்து பரவிவிடும். சூலகத்தின் மேற்புறமுள்ள சுரப்பியின் மேலிருந்து தாதிழைகள் எழுகின்றன. பெண்ணகம் : இருவிதையிலே ஈரறைச் சூலகம்; சூல்பை துள்ளது; ஒவ்வோர் அறையிலும் ஒரு சூல்தான் உண்டு; தா-18