பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 277. & 'i (31 unit-Gi-3' (Sapotaceae) இலுப்பைக் குடும்பம் இதில் 40 பிரிவுகளும், 600 இனங்களும் உள்ளன. மரங்களும் சிறு மரங்களுமான இக் குடும்பம் வெப்ப நாடுகளில் காணப்படு கிறது. இவற்றில் பால் வடியும். இலை: தனியிலே சுற்றடுக்காக இருக்கும்; தோல் போன்றது; தடித்தது; இலேயடிச் செதில் சிலவற்றில் காணப்படும். பூ: இரு பாலானவை; இருபுறச் சமச்சீர் உடையது; பூவடிச் சிறு செதில் உண்டு; தனிப் பூவும் நுனி வளராப் பூந்துனரும் இருக்கும். அல்லி வட்டத்தில் 4 - 12 இதழ்கள் உள்ளன. இவை 2+2, 3 +3, 4-4 அல்லது 5 ஆகவும் இருக்கும். இதழின் அடிப்புறம் குறுகியிருக்கும். புல்லி வட்டத்தில் அல்லியைப் போல அதே எண்ணிக்கை இதழ்கள் இணைந்திருக்கும்; விளிம்பு தழுவியது; இதழின் பக்கங்களிலும் வெளிப்புறத்திலும் சிறு செதில் போன்ற வளர்ச்சி இருக்கும். ஆணகம்: ஆன கத்தில் புல்லியொட்டிய தாதிழைகள் உள. 4 அல்லது 5 தாதிழைகளேக்கொண்ட 2 அல்லது 3 அடுக்கான தாதிழைகள் இருப்பதுமுண்டு. இவற்றின் உள்வட்டத் தாதிழை களே தாது உண்டாக்கவல்லன. ஏனய போலித் தாதிழைக ளாகும். CT, 를 ^ை6 으 {CO) படம்.113. இலுப்பை மலரும், பாகங்களும் (இலுப்பைக் குடும்பம்)