பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 281 ہ۔--سی படம் 115. ஆஸ் கிளியியடேசீ (எருக்குக் குடும்பம்) எருக்கு மலரும், பாகங்களும் ஆனகம் : 5 தாதிழைகள் புல்லி மடிப்புடன் பொருந்திச் சூல்முடியுடன் இனேந்து ஒரு சதைப்பற்றுள்ள தளமாகிறது (gymostegium). அதில் தாதுப்பைகள் ஐந்து டிரான்ஸ்லேட்டராகிப் (translator) பதிந்துள்ளன. ஒவ்வொன்றும் நுண்ணிய கவை போன்று இருக்கும். கவைக்காம்பு மேற்புறத்தும், கவை நுனி இரண்டும் அகன்று தாதுக்களே யு டையனவாய் அடியிலுமாக இருக்கும். புல்லியின் உட்புறத்தில், கரோனுவிற்கடியில் சுரப்பிகள் தேன் சொரியும். இதனே உண்ணவரும் வண்டுகள் சூல்முடித் தளத்தில் வந்திறங்கி மலரு முக்கும்போது, இந்த டிரான்ஸ்லேட்டர் அதன் ஈரமுள்ள கால்களில் ஒட்டிக்கொள்ளும். டிரான்ஸ் லேட்டரின் கவை இரண்டும் ஈரம் பட்டவுடன் சுருங்கி நெருங்கும் இயல்பின. ஆதலின், இவை எளிதாக வண்டின் மூலம் பிற மகரந்தச் சேர்க்கைக்குப் போக முடிகிறது. இம்மாதிரியான பூக்கள் எல்லாம் சைனன் காய்டியே (cynancoideae) என்ற பெரும் பிரிவில் உள்ளன. பெரிபுளோ காய்டியே (periplocoideae) என்ற இன்னெரு பெரும் பிரிவில் ஐந்து தாதிழைகளும் தேக்கரண்டி வடிவில் உள்ளன. அவற்றின் நுனியில் தாதுக்கள் நன்னன்காகச் சேர்ந்திருக்கும். பெண்ணகம் : இரு சூலிலேச் சூலகம் தனித்தனி இருக்கும். சூலகம் மேலானது; சற்றுத் தாழ்ந்த சூலகமும் உண்டென்பர். இரண்டு சூல்தண்டுகளும் மேல்நோக்கித் தனித்தெழுமாயினும், சூல்முடியில் இரண்டும் ஒன்ருகி 5 பிரிவான சூல்முடித் தளமாகி விடும். ஒவ்வொரு குல் இலேயும் ஓர் அறையுடையது. பல சூல்கள் சுவர் ஒட்டு முறையிலும் வயிறு ஒட்டு Cventral) (pop யிலும் அமைந்திருக்கும்.