பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 287 siosty I i 13GofGu 13. (Scrophulariaceae) நீர்ப்பிரமைக் குடும்பம் இக் குடும்பத்தில் 210 பிரிவுகளும், 3000 இனங்களும் காணப் படும். உலகில் எங்கணும் வளர்கின்றன. பெரிதும் சிறு செடிகள்; புதர்களும் உண்டு. சில தொத்துச் செடிகளாக வளரும் (ஸ்டிரை கா). I i. நமது நாட்டில் ஆஞ்சிலோனியா (angilonia-grandiflora), 66th (360) got isot (Limnophila-heterophilla), @L roul fluth (dopatrium-nudicaule), 6ŕo@l–Ğintriq-u i r (stemodia-viscosa), 6) jir6örts. 68u 1 r (vendellia), Giv(335T GL1flu 1T (scoparia), Givtq-6o»g str (strigaeuphrasioides), Quin-gaorfioso (pedicularis), J Psaut (eusselia) முதலியன வளர்கின்றன. இலை : தனி இலே; எதிர் அடுக்கானவை; சுற்றடுக்கு முண்டு: இறகன்ன பிரிவுடையது. இலேயடிச் செதில் அற்றது. H பூ நுனி வளராப் பூந்துனர்; நுனி வளர் பூந்துணரும் இருக்கும். பூவடிச் செதிலும், பூவடிச் சிறு செதில்களுமிருக்கும். இருபாலானது; ஒருபுறச் சமச்சீரானது. அல்லி : 4-5 விளிம்புடையது; மேற்புறத்தில் இதழ்கள் பிரிந்தும், நேர் ஒட்டியும், விளிம்பு தழுவியும் காணப்படும. புல்லி ; இனேந்த புல்லி அடியில் குழல் வடிவானது; மேற் புறத்தில் இரு உதடு வடிவமுள்ளது. 4-5 பிரிவுகள் விளிம்பு தழுவியுள்ளன. அடி இதழ் சிலவற்றில் தேன்குழாயாக (spur) மாறியிருக்கும். ஆணகம் : 5. தாதிழைகள் ; வர்பாஸ்கம் (verbascum) செடியில் காணப்படுமாயினும், பெரிதும் 4 தாதிழைகள் உள்ளன. இவற்றுள் இரண்டு நீளமானவை; இரண்டு குட்டையானவை. சிலவற்றில் ஐந்தாவது தாதிழை போலியாகவும், செதிலாகவும் மாறியிருக்கும். சில பூக்களில் (வெரோனிக்கா-weronica, கால் சியோலேரியா-calceolaria) இரண்டு தாதிழைகளே உள்ளன. தாதுப் பைகள் இரண்டு அறைகளே உடையன. இவை சில சமயம் ஒன்றைவிட மற்ருென்று பெரிதாக இருக்கும். பக்நீராவில் (buchnera) ஒரு பை மறைந்துவிடுகிறது. சூல்பைக்குமேல் வட்ட வடிவமான, அல்லது பிரிந்த சுரப்பி காணப்படும்.