பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 291 பூ : நுனி வளராப் பூந்துணரில் சிறு மலர்கள் பூவடிச் செதில் பெற்றுள்ளன. இருபாலானவை; ஒருபுறச் சமச்சீருடையன. 5 அடுக்கானவை; சூலிலே மட்டும் இரண்டே. - அல்லி : 5 விளிம்புகள் அல்லது 6-8; உதிராது நிலேத்து மிருக்கும். புல்லி : புறவிதழ்களின் எண்ணிக்கையே அகவிதழ்களிலும் காணப்படும், மேற்புறம் இரண்டு உதடு வடிவாகவும், அடியில் குழல் வடிவிலும் இருக்கும். நிறமுள்ள மங்கையர் மூக்கினேக் குமிழின் மலருக்கு ஒப்பிடுவார்கள். இம் மலரைத் தலைகீழாகப் புரட்டிப் பார்த்தால் இவ்வொப்புமை புலகுைம். ஒருபுறச் சமச் சீரானது; விளிம்பு தழுவியது. ஆணகம் : தேக்கு மரப் பூவில் 5 தாதிழைகள் உள்ளன. பெரும்பாலும் 4 தாதிழைகள்தாம்; இவற்றுள் இரண்டு நீளமாகவும், மற்றிரண்டு குட்டையாகவும், இதழ் மேலாகவும் இருக்கும். ஒன்று போலியாகித் தோன்றுவதுமுண்டு. பெண்ணகம் : பெரும்பாலானவற்றில் இரு சூல் இலே நான் கறைச் சூலகம் காணப்படும் ; ஒரு போலிச்சுவர் ஈரறைகட் கிடையில் தோன்றுவதால் நான்கறைகளாகின்றன. டுரான் டாவில் (duranta) நான்கு சூல் இலேகளும், ஜென்சியாவில் (geunsia) ஐந்தும் உள்ளன; அச்சு ஒட்டுமுறையில் அறைக் கொரு சூல் அமைந்திருக்கும் ; சூல் நேரானது அல்லது தலே கீழானது. சூல் தண்டு ஒன்றே ; சூல் இலே எண்ணிக்கையாக சூல்முடி பிரிந்துள்ளது. கனி : உள்ளோட்டுத் தசைக்கனி; 2-4 ஆகப் பிரியும் ; வெடி கனியுமுண்டு. விதையில் முளேக்கரு நேராக இருக்கும் ; பெரிதும் முளே சூழ் தசை இல்லே. பயன் : தேக்கமரம் ஒன்றே பெரும் பயன் விளேப்பதாகும் ; நீலமலைப் பகுதியில் நன்கு வளர்கிறது; நொச்சி, குமிழ் முதலியன மருந்துக்கு உதவும். பல அழகு தருவன. டுரான்டா, வர்பீனு, பூக்கிளாத்தி, உன்னி, நொச்சி முதலியவை வேலிக்கும், சாலேப் புறங்களிலும் வளர்க்கப்படும்; கண்டமரம் உப்பங்கழியில் செழித்து வளரும். இதன் பக்க வேர்களிலிருந்து மூச்சு வேர்கள் (pneumatophores) மேல்நோக்கி நீருக்கு வெளியே வளரும்.