பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£293 படம் 119. லேபியேட் டே (துளசிக் குடும்பம்) சால் வியா மலரும், பாகங்களும் ஆனகம் : 4 தாதிழைகள் புல்லி மேலானவை; இவற்றுள் இரண்டு நீளமானவை; இரண்டு குட்டையானவை; சால்வியா (salvia) பிரிவில் 2 தாதிழைகளே உள்ளன. இவைகளில் பெரிய மாறுதல் காணப்படும். இதில் தாதுத்தாள் (filament) மிகவும் சிறுத்து இருக்கும். இணேப்பு (connective) மிகவும் நீண்டு தாதுப் பைகளே இருமுனைகளிலும் பெற்றிருக்கும். தாளும் இணேப்பும் இறுகப் பொருந்தாமல், இணைப்பு அசைவதற்கு ஏற்றவாறு ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனகத்திற்கும் சூலகத்திற்கும் இடையில் சுரப்பித் தேன் சொரியும். இதை உண்னவரும் சுரும்பினம் தமது உறிஞ்சு குழலே (probosis) புல்லியின் அடியில் செலுத்தும் இக் குழல் இணேப்பின் அடியிலுள்ள போலித் தாதுப்பையைத் தொடு மானுல், இணேப்பு அசைந்து கொடுக்கும். அப்பொழுது இணேப் பின் (மற்ருெரு முனேயிலுள்ள) மேல்நுனியிலுள்ள மகரந்தப்பை சுரும்பின் மேலே அடிப்பதால், தாது அதன்மேலெல்லாம் படியும். இச் சுரும்பு வேறு பூக்களுக்குச் செல்லும்போது அப் பூவின் வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் சூல்முடியில் இத் தாது ஒட்டிக் கொள்ளும். இவ்வாறு சால்வியா பூவில் பிற மகரந்தச் சேர்க்கை நிகழ்கின்றது. பெண்ணகம் : சூல்பை மேலானது இருகுலிலேச் சூலகம் ; இரண்டு சூலறைகளின் சுவர் உள் எழுவதால் நான்கறைகளாகத் தோன்றும் ; சூல் 'தண்டு சூல்பையின் அடியிலிருந்து எழும் ; இதைச் சூலக மையத் தண்டு (gymobasix style) என்பர். இது