பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296. தாவரம்-வாழ்வும் 1ெ, 11 ויועו பிரிந்தும் இருக்கும். இதில் மேல் உதடு 3 இதழ்களாலும், புே. சற்று மெல்லிய 2 இதழ்களாலும் ஆனது. இவை பெரிதும் பொய் பாற் பூக்கள். -i. பல செடிகளில் ஈருதடு உள்ள புல்லியை உடைய பெப் பூக்கள் மஞ்சரியின் சுற்று வட்டத்திலும், குழல் வடிவான புள்ளி யுள்ள இரு பாலான பூக்கள் மஞ்சரியின் நடுவிலும் அார். துள்ளன. இம் மஞ்சரியை ஒரு தன்மையற்ற சிரமஞ்சரியை (ht:1. gamons head) என்பர். சில செடிகளில் குழல் வடிவான பூக்களே சிரமஞ்சரி முழுதும் இருக்கும்; அல்லது நாக்கு வடிவான புல்லியை உடைய பூக்களே சிரமஞ்சரியின் முழுதும் இருக்கும். இவற்றை 6PG &63roolour or of Tudorf (homogamons head) 6T or lif. ஆணகம்: 5 தாதிழைகளேக்கொண்டது; புல்லி மேலானவை: தாதுப்பையை ஒட்டியவை (syngesious); தாது உட்புறம் உகும் இக் குடும்பத்தில் உள்ள தாவரங்களேப்பற்றிப் பெரியதோர் ஆய்வு செய்த ஜேம்ஸ் ஸ்மால் (James Small) இதில் தாதிழைகள் வகைப்படும் என்பர். தாதுப் பைகளின் மேற்புறம் நீண்டும், அடிப்புறம் நீண்டும், தாடிபோன்று வளர்ந்தும், மயிர்த்துாவிகளே ப் பெற்றும் பலவாறக உள்ளன. தாதுப்பைகள் பத்தும் ஒட்டிக் கொண்டிருப்பதால் ஆன கத்தின் மேற்புறம் ஒரு வட்டமான குழல்போலத் தோன்றும். மலரில் சூல்தண்டு இதனே ஊடுருவி மேற்செல்லும். சூல்தண்டைச் சுற்றி மயிர்த்துTவிகள் உள்ளன. ஆதலால், இரு பிளவுபட்ட சூல்முடி, சூல்தண்டுடன் வளர்ந்து மேற்செல்லும்போது, தாதுப்பைகள் வெடித்து உதிரும் மகரந்தப் பொடியை வெளியே கொண்டுவரும். இப் பொடியைத் தேனி, வண்டு முதலியவை வேறு பூக்களுக்குக் கொண்டுசெல்லும், சில பூக்கள் ஆண்முள் முதிர்வுடைமையின், சூல்முடி இப் பொடியை ஏற்கத் தயாராக இருப்பதில்லே. அன்றியும், தாதிழைகளின் அடியில் சுரப்பிகள் தேன் பிலிற்றும். புல்லிவட்டம் இணைந்த இதழ்களே உடையதாகலின், குழல்வடிவான புல்லியின் அடியில் சுரக்கும் தேன் வர வர மேல் எழும்பும். பிற மகரந்தச் சேர்க்கை உள்ள இப் பூக்கள் ஆயிரக்கணக்காக சிரமஞ்சரியில் இருப்பதால், ஒரு தேனி அல்லது வண்டு ஒரு தரம் இம் மஞ்சரியில் தேனுண்ண வரும்போது பல பூக்களேப் பிற மகரந்தச் சேர்க்கைக்கு உட் படுத்தும். பெண்ணகம் : சூல்பை தாழ்வானது; இரு சூலிலே ஓரறைச் சூலகம்; ஒற்றைச் சூல் அடி ஒட்டியது; சூல்தண்டு நீளமானது; புல்லிக்கு மேலும் தோன்றும் சூல்முடி இரு பிளவுள்ளது; பல வடிவாக இருக்கும்.