பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரக் குடும்ப இயல் 301 படம் 122. யூ.போர்பியேசி (ஆமணக்குக் குடும்பம்) பூபோர்பியா மலரும், இணர்ச் சித்திரமும் gb(3urif snuir (euphorbia), Guid-oon 55ofo (pedilanthus) gi's பிரிவுகளில் சயாத்தியம் (cyathium) என்ற மஞ்சரி காணப்படும். இதில் பெண்ணகம்மட்டுமுள்ள பெண்பூ நடுவிலும், ஒற்றைத் தாதிழைமட்டுமுள்ள பல் ஆண் பூக்கள் சுற்றியும், இவை அனைத் தையும் கிண்ணம் போன்ற சிற்றிலே வட்டம் மூடிக்கொண்டு மிருக்கும். முத்துக்கொட்டையில் (ricinus communis) தாதிழைகள் பல கட்டுகளாக (polyadelphous) அமைந்துள்ளன. பூவுறை விளிம்பொட்டியும், விளிம்பு தழுவியும் இருக்கும். பொதுவாக அல்லியும் புல்லியும் தெளிவாகக் காணப்படும். ஐந்தடுக்கானவை. ஆண் பூக்களில் அகவிதழ்கள் இருந்தால், அவற்றின் எண்ணிக்கையான அல்லது இரட்டிப்பான தாதிழைகள் இருக்கும். தாதுப்பை இரண்டறை உடையது. தாதிழைகட்கு உட்புறத்தில் சுரப்பி காணப்படும். போலிச் சூலகம் இருப்ப துண்டு. பெண் பூக்களில் போலித் தாதிழை இருப்பதுமுண்டு. சூல்பை மேலானது; 3 சூல் இலே மூவறைச் சூலகம்; ஒன்று அல்லது இரண்டு சூல்கள் அச்சு ஒட்டு முறையில் அமைந்துள்ளன; தொங்கு சூலும், தலைகீழ்ச் சூலும் இருக்கும்; விதைத் துளேயினிட மாகப் பத்திரி காணப்படும். சூல்தண்டு மூன்றும் மேலே இரு பிளவாக இருக்கும். சூல்முடி 3-6 அகன்ற அல்லது மெல்லிய பிரிவுகளாகிவிடும்; கனி வுைசோ கார்ப் (schizocarp) எனப்படும். சூல் இலகள் தனித்தனி பிளந்து பின்னர் வெடித்து விதைகளே உதிர்க்கும். விதையில் முளேக் கரு நேராகவும் வளைந்தும் இருக்கும். முளே சூழ் தசை சதைப்பற்ருனது.