பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவிதையிலைத் தாவரங்கள் இத் தாவரங்கள் பெரிதும் சிறு செடிகளே; மரங்களுமுண்டு. தண்டில் குழாய்முடிகள் சிதறியுள்ளன. இலே நரம்பு நேருக்கு நேரானது; இலே விளிம்பு பிரியாதிருக்கும். பூக்கள் 3 அடுக்கா னவை; விதையில் ஒரு விதையிலே காணப்படும். ஒருவிதையிலேத் தாவரங்கள் மிகத் தொன்மையானவையும், தற்போது அழிந்துபோனவையுமான இரு விதையிலேத் தாவரங்களி னின்றும் தோன்றியிருக்கவேண்டுமென்பர். ரனேலிஸ் (ramales) தொகுதியிலிருந்து உண்டாகியிருக்குமென்றும் நம்பப்படுகிறது. இதல்ை பெஸ்ஸி (Bessy), ஹட்சின்சன் (Hutchinson) முதலிய பேராசிரியர்கள் ஒரு விதையிலேத் தாவரங்கட்குப்பின் வைத்துப் பயில்வர். எனினும், எங்க்ளர் (Engler) முதலியோர் இவற்ற்ை இரு விதையிலேத் தாவரங்கட்குமுன் வைத்துள்ளனர். ஆர்பர் (Arber), இவை இருவிதையிலேத் தாவரங்கட்கு முந்தியதாகவே கருது கின்றர். இதுகாறும் கிடைத்துள்ள உண்மைகளும், தாவரங் களின் வெளியமைப்பு, உள்ளமைப்பு இவற்றைக்கொண்டு செய்த ஆராய்ச்சிகளின் முடிவும் இருவிதையிலேத் தாவரங்களிலிருந்து ஒருவிதையிலேத் தாவரங்கள் தோன்றியிருக்கலாம் என்ற கொள்கையை வலியுறுத்தும். so gam@GJI 3, rfi” (31–3 (Hydrocharitaceae) வாலிஸ் நீரியா குடும்பம் இதில் 17 பிரிவுகளும், 80-90 இனங்களும் உள்ளன. இவை உலகின் வெப்பமான பகுதிகளில் உள்ள நீர்வாழ் செடிகள், ஹாலோபைலா (halophila), என் ஹாலஸ் (enhalus), தாலாசியா (thalassia) ஆகிய மூன்றும் கடலில் வாழ்வன.