பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 தாவரம்-வாழ்வும் வர ைம் o W 胰 Il- \ 홍 | - | இது படம் 123. ஹைடுரோகாரிட்டேசீ ஆட்டிலியா மலரும், பாகங்களும் இச் செடிகள் முழுவதும் நீரில் அமிழ்ந்தும் பாதி அமிழ்ந்தும், நீரில் மிதந்தும் வாழ்கின்றன. இலைகள் நெருங்கியும், எதிர் அடுக்காகவும், வட்ட அடுக்காகவும் இருக்கும். பல வடிவானவை: ஒருபோக்கு நரம்பு முறை உள்ளன. காலிஸ் நீரியாவில் நீளமான இலேகளும், ஆட்டிலியாவில் (ottelia) அகன்ற இலேகளும் உண்டு. மஞ்சரியோ, பூவோ அகன்ற பாளே யையொத்த இலேயடிச் செதில் அல்லது செதில்களின் கக்கத்தில் எழுகின்றன. பூக்கள் இரு பாலானவை; பொதுவாகப் பால் வேறுபட்டிருக்கும், பால் வேறு பட்ட செடிகளில் உண்டாவதால். இருபுறச் சமச்சீரானவை; பெண்பூ தனியாகவும், ஆண் பூக்கள் குடைமஞ்சரியிலும் காணப் படும். பாளைகள் காம்பின்றி நேராகவும், பெண் பூக் காம்பு நீண்டு சுருண்டும் இருக்கும். பூவுறை ஆறு பிரிவுகளாகத் தனித்து இருக்கும்; இரண்டு வட்டமாகத் தோன்றும். புறத்தில் உள்ள அடுக்கு புற விதழ் போலவும், பச்சை நிறமாகவும், விளிம்பு ஒட்டியும் இருக்கும். அகத்தில் உள்ள அடுக்கு அகவிதழ் போலவும், விளிம்பு தழுவியும் காணப்படும். ஆண் பூக்களில் 3 முதல் பல தாதிழைகள் உள்ளன. போலிச் சூலகம் அருகித் தோன்றும். நீரின் உதவியால் வாலிஸ் நீரியாவில் பிற மகரந்தச் சேர்க்கை நிகழும். இதனே முன்னயே அறிந்தோம. பெண் பூக்களில் சூல்பை கீழானது. ஒரு குளிலே ஓரறைச் சூலகத்தில் 3-6 சுவர் ஒட்டுத் தசைகள் காணப்படும் (parietal placentae). ஒவ்வொன்றிலும் பல சூல்கள் உள்ளன. துல்