பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவிதையிலேத் தாவரங்கள் 309 s» +ı _ırıf (36sı (Scitaminae) வெப்ப நாடுகளில் வளரும் வாழை போன்ற பல செடிகளே ச் சேர்த்து சைடாமினே என வழங்குவர். இவற்றுள் நான்கு சிறு குடும்பங்கள் உள்ளன. இவை மிகவும் சிறந்து விரிந்த குடும் பங்களாகக் கருதப்படுகின்றன. 1âu 1,33 G (Musaceae) வாழைக் குடும்பம் இதில் 5 பிரிவுகளும், 150 இனங்களும் உள்ளன. வெப்ப நாடுகளில் வளரும். வாழை மிகப் பெரிய செடியாகும். தோற்றத்தில் மரம் போன்று இருக்குமாயினும், உண்மையில் அது ஒன்றே டொன்று பின்னிக்கொண்டு அடர்ந்திருக்கும் இலேகளின் (பட்டை) அடிப்பகுதிகளேயாம். இதன் உண்மையான தண்டு நிலத்திற் கடியில் படுக்கையாக வளர்ந்துவரும் பெருங் கிழங்காகும். இலை: அகன்றவை; இரு பத்தியாகவும், சுற்றடுக்காகவும் இறகன்ன நரம்பமைப்புடனும் இருக்கும். மஞ்சரி : கலப்பு மஞ்சரி பாளேபோன்ற கண்ணடி இலேயின் கக்கத்தில் தோன்றும் பூக்கள் ஒருபுறச் சமச்சீரானவை; இரு பாலானவையும், பால்வேறுபட்டனவும் ஒரே மரத்தில் உண்டு 3 ஆண் பூக்கள் மஞ் சரியின் மேற்புறத்துள்ள பூவிலேக் (bract) குள்ளும், பெண் பூக்கள் மஞ்சரியின் கீழே :ள்ள பூவிலக்குள்ளும் காணப்படும். பூக்கள் ஒழுங்கற்றவை. பூவுறை 6 பகுதிகளே உடையது இரு வட்டங்களாக இருக்கும் : இவ்விதழ்கள் ஒவ் வொன்றும் ஒரேமாதிரியா "I'm இல்லே : தாதிழைகள் 6 : இவற்றுள் ஒன்று போலியாகிவிடும் தாள் மெல்லியது ; தனித்தனியாக இருக்கும். சூலகம் தாழ்ந்தது மூவறைகஃ உடையது. ஒவ்வொரு அறையிலும் ஒரு சூல் அச்சு ஒட்டுமுறையில் இருக்கும்; தலை கீழானது. சூல்தண்டு ஒன்றே, தாதிழைகளேவிட வலியது ; சூல்முடி மூன்று பிரிவுடையது. கனி மூன்று சூல் இலேப்பிரிவுடைய வெடிகனி அல்லது நீண்ட சதைக் கனி ; விதையில் பத்திரி காணப்படும்; முளே சூழ் தசை உண்டு. *