பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 129. கிராமினே (நெற் குடும்பம்) நெற்பூவும் பாகங்களும் இலை : கணுவில் ஒவ்வொன்று இருக்கும்; இரு பத்தியும் உண்டு. ஒருபோகு முறையுள்ளது. இலேயின் அடிப்பகுதி தண்டைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும்; மேற்பகுதி அகன்ற இலேப் பரப்பாகும். இவ்விரு பகுதியும் இனேயுமிடத்தில் பல வடுவ லிகுபூல் (ligule) இருக்கும். பொதுவாக நீண்ட இலேகள், குத்துக் கத்தி வடிவமானதுமுண்டு. இலேப் புறணியில் மிக மெல்லிய மயிர்த் துாவிகள் அல்லது கல்லுயிரணுக்களால் ஆகிய அரம் போன்ற நுண்ணிய பற்கள் (silicious cells) காணப்படும். 圖 மஞ்சரி : கதிர் எனப்படும் (spikelet), பொதுவாகத் தண்டு நுனியில் கதிர்கள் உண்டாகின்றன; கதிர்க் காம்பும் உண்டு. கதிர்கள் மூவகைப்படும். காம்பில்லா பூ மஞ்சரி; நுனிவளர் மஞ்சரி; கலப்பு மஞ்சரி. கதிர்கள் எல்லாம் அகன்ற நீண்ட பிரிந்த பூவிலேக் கக்கத்தில் காணப்படுகின்றன. கதிரில் சில அல்லது பல காம்பிலாப் பூக்கள் உள்ளன. இவை கதிர்த் தண்டு (rachilla) ஒன்றில் அடுக்கப்பட்டுள்ளன. கதிர்க்காம்பிற்கடியில் முதல் குளும் (glume), இரண்டாம் குளும் என்ற இரு வெறு உமிகள் இருக்கும். உமியின் வடிவம், அமைப்பு, நரம்பு முறை ஒவ்வொரு கதிரிலும் வேறுபடும். இவை பெரிய பாகுபாடுகளுக்கு உதவியாக