பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவிதையிலேத் தாவரங்கள் 3.19 படம் 131. ஆர்க்கிடேசீ. ஆர்க்கிஸ் மலரும், பாகங்களும் வும், முட்டை வடிவாகவும் இருக்கும். இலேப் பட்டை, தண்டை மூடிக்கொண்டிருக்கும். காம்பில்லா மஞ்சரி, நுனிவளர் மஞ்சரி, கலப்பு மஞ்சரி முதலியன காணப்படும். பூ : இரு பாலானது ; பால் வேறுபட்ட செடிகளுமுண்டு; பூவடிச் செதில் நன்கு காணப்படும். பூக் காம்புடனும், பூக் காம் பின்றியும் இருக்கும்; ஒரு புறச் சமச் சீரானது; பூ வளருங்கால் பூக் காம்பு 180° சுழன்று அடிப்புறம் மேலாகவும், மேற்புறம் கீழாகவும் திருகிவிடும். பூவுறை ஆறு இதழ்களே இரு வட்டங்களில் உடை யது. வெளி வட்டத்தில் உள்ள புல்லி ஒத்த இதழ்கள் மூன்றும் பச்சையாகவும், புல்லி போலியாகவும் இருக்கும். விளிம்பு தழுவியது. இவற்றுள் நடுவிலுள்ளது சற்றுப் பெரிதாகவும் கண் கவர் வனப்புடையதாகவும் இருக்கும். உள் வட்டத்திலுள்ள 3 இதழ்களும் சற்றுப் பெரியவை; இவற்றில் நடுவில் உள்ள இதழ் லேபெல்லம் எனப்படும். இது மற்ற இதழ்களே விட வடிவிலும், நிறத்திலும், அமைப்பிலும் பெரியதாகி வேறுபட்டிருக்கும். இதன டியில் தேன் குழல் (spur) ஒன்றுண்டு. இதில் தேன் சுரந்தும், சுரக்காமலும் இருக்கும். பெண்ணகம் : குற்பை கீழானது ; மூன்று சூல் இலே ஓரறைச் குலகம்; சுவர் ஒட்டிய சூல் தசை மூன்றும் இரண்டிரண்டாக உள்ளது. சிலவற்றில் மூன்றறைகளும் உண்டு. இவற்றில் அச்சு ஒட்டு முறையில் பல சூல்கள் அமைந்துள்ளன. சூல் மிகச் சிறியது. தலே கீழானது; சூல் தண்டு, சூல் முடி, தாதுத் தாள்கள் எல்லாம் ஒன்ருயினேந்து சதைப்பற்றுள்ள தளமாகி (gymostamium)