பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 தாவரம்-வாழ்வும் வரலாறும் | இருக்கும். இதில் பலவாறு ஒட்டி மேலேறி உள்ள ஒன்று அல்லது இரண்டு தாதிழைகள் காணப்படும். தாதுப் பை ஒவ்வொன்றிலும் இரண்டறைகள் உள்ளன. உட்புறம் வெடிக்கும். பொதுவாக தாதுக் கவைகளில் (pollinia) தாதுக்கள் உள்ளன. கனி : வெடி கனி; முற்றிய கனியில் ஈரம் பட்டவுடன் 3-6 பகுதிகளாக வெடிக்கும் இயல்பின. மிகப் பல விதைகள் உண்டா கும். இவை மிகச் சிறியவை; முளேசூழ் தசையில்லே. முளேக் கரு தனித்துத் தோன்றுவதில்லே. பூக்களின் அமைப்புப் பலவாறு வேறுபட்டு மிகச் சிக்கலாக உள்ளது. இதல்ை இக் குடும்பம் மிகவும் சிறந்து விரிந்து பரிண மித்துள்ளது. அறிஞர்கள் அவர்கள் கருத்திற்கேற்ப இப் பூக் களின் அமைப்பையும், இக் குடும்பம் எதிலிருந்து தோன்றி யிருக்கக்கூடுமென்பதையும்பற்றி விரித்துரைப்பர். பயன் : , ஆர்க்கிடு பூக்கள் மிக அழகானவை. தக்க தட்ப வெப்பம் இருந்தால்தான் வளரும் இயல்பின. ஏதேனும் சற்றுக் கூடியும் குறைந்துமிருப்பின் இவை வளர்வதில்லே. கட்லேயா (Cattleya), fiihtolą uuth (Cymbidium), @-6örĠLirferiræth (Odontoglossum), டென்டுரோபியம் (Dentrobium), சைப்பிரி பீடியம் (Cypripedium) முதலியவை மிக அழகிய பூக்களுக்காக, அருமை யாக வளர்க்கப்படுகின்றன. வானில்லா (Vanella) என்ற ஆர்க்கிடு பூவில் வானில்லா என்ற மனப் பொருள் கிடைக்கிறது.