பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செடியின் பாகங்கள் ஏதாவது ஒரு செடியை வேருடன் பிடுங்கிப் பார்த்தால் அது இரு வேறு பகுதிகளாக இருத்தலேக் காணலாம். ஒன்று வேர்ப் Lugo (root system); info@goorp gador(Bri Lago (shoot system). தாவரங்கள் பொதுவாக வேர் உடையன. முதலில் தோன்று வதும் வேர்தான். வேரில்லாத தாவரங்களும் உண்டு. அவற்றின் விரிவைப் பின்பு காண்போம். வேர்ப் பகுதி இரு பெருந் தொழில் களேச் செய்து வருகின்றது. அது நிலத்தில் உள்ள நன்னிரையும், ஒருசில உப்புகளேயும் உறிஞ்சித் தாவரங்களே வளர்க்கும். தாவரங்கள் நிலத்தில் நன்ருக ஊன்றி வாழ்வதற்கும் வேர் துணை செய்கின்றது. அநேகமாக வேர்களெல்லாம் புவியீர்ப்புக்குக் கட்டுப்பட்டுக் கீழ்நோக்கி வளரும். தண்டுத் தொகுதி புவியீர்ப் புக்கு எதிராக மேல்நேர்க்கி வளரும் இயல்புடையது. பொதுவாக, இத் தொகுதி நிலமட்டத்திற்கு மேலே காணப்படும் (படம் 13). இதில் தண்டு, இலேக்குருத்து, பூ, காய், கனி முதலியவற்றைக் காணலாம். தாவரத்தில் தண்டுதான் எல்லா உறுப்புகளேயும் தாங்கி நிற்கிறது. இலைகளேயெல்லாம் கூடியமட்டும் சூரிய வெளிச்சம் படும்படி அமைத்துக்கொள்ளுதல் தாவர இயல்பாகும். அதற்கேற்ப இலைகள், தண்டின்மேல் பலவகையாக அடுக்கப் பட்டுள்ளன. இலையடுக்கம் (phyllotaxy) தாவரங்கட்கேற்ப மாறு படும். தண்டில் இலே தோன்றிய இடத்திற்குக் கணு (mode) என்று பெயர். இலைகள் பொதுவாக இலேக்காம்புகளேப் (petiole) பெற் றுள்ளன. தண்டிலிருந்து நேரடியாக இலக்காம்பின்றி இலைகள் தோன்றுவதுமுண்டு. இலேக்கும் தண்டிற்கும் உள்ள கோணம் தாவரங்களுக்கேற்ப மாறுபடும். இக் கோணத்தைக் கணுச்சந்து’ (axil) என்பர். இதில் ஒரு கணுக் குருத்து காணப்படும். இதுவே பின்னர்க் கிளையாகவோ, பூவாகவோ அன்றி பூங்கொத்தாகவோ வளர்கின்றது. தண்டுடன் இணைந்த இலக்காம்பின் அடியில் இருபுறத்திலுமாக இரு இலையடிச் செதில்கள் (stipules) உள்ளன. இஆலயில் பொதுவாக ஓர் நடுநரம்பு (mid-rib) உண்டு. இதிலிருந்து