பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தாவரம்-வாழ்வும் வரலாறும் கிளேத்து எழும் பக்க நரம்புகள் (lateral veins) இலேயின் பரப் பெல்லாம் சென்று இலையை விரித்துத் தாங்கி நிற்க உதவும். தாவரங்களில் இலே மிகவும் இன்றியமையாத உறுப்பாகும். இலே களுக்கு வேண்டிய நீர், மற்றப் பொருள்கள், இலே நரம்பின் மூலம் இலே முழுதும் செல்கின்றன. இலேயில் ஆக்கப்படும் உணவு, நரம்பு களின் ஒரு பாகத்தால் தாவரத்தின் மற்றப் பகுதிக்குச் செல்லும். தண்டின் நுனியில், துரிதமாக வளரும் நுனிக் குருத்து (terminal bud) உள்ளது. ஒரு தாவரத்தின் உயரம் நுனிக் குருத்து வளர் வதைப் பொறுத்தும், அகலம் கணுக் குருத்துகள் வளர்வதைப் பொறுத்தும் இருக்கும். பூவரசு, வெண்டை முதலிய தாவரங் களில் கணுக்குருத்து பூவாகத் தோன்றும். கொன்றை, வேம்பு, குன்றி முதலியவற்றில் பூங்கொத்தாக இருக்கும். பூவிற்குக் காம்பு ஒன்றுண்டு. இதனைத் தாவர நூலில் பூக்காம்பு (pedice) என்பர். வள்ளுவர் இதனேக் கால்’ என்கிரு.ர். பூங்கொத்தில் (inflorescence) Lbż assir soisvorst #3, ribosib (peduncle) so so un b துள்ளன. பூவுக்கடியில் பூவடிச் செதில் (bract) ஒன்று கானப் படும். பூவில் பொதுவாகப் புறவிதழ் (sepals), அகவிதழ் (petals), தாதிழை (stamens), சூலகம் (ovary) என்ற நான்கு வட்ட அடுக்குக் (whorl) காணப்படும். புறவிதழ்த் தொகுதி (calyx) புல்லிவட்டம் எனவும், அகவிதழ்த் தொகுதி (corolla) அல்லிவட்டம் எனவும், தாதிழைத் தொகுதி (androecium) ஆனை கம் எனவும், குலக அடுக்கம் (gymoecium) பெண்ணகம் எனவும் கூறப்படும். பூக்களின் வளர்நிலைக்கேற்ப அரும்பு, மொட்டு, முகிழ், போது, பூ, மலர், அலர், வீ ஆகிய பல சொற்கள் உள்ளவாறுபோல் தாவர மொழியில் இல்லே. பூக்கள் பிஞ்சாகி, காயாகி, கனியாகி, விதையை உதிர்த்து நிற்கும். இவையனைத்தையும் ஒரே இனரில் காணலாம். சில தாவரங்களில் நுனிக் குருத்துப் பூங்கொத்தாகித் திகழ்வதும் உண்டு.