பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தாவரம்-வாழ்வும் வரலாறும் கரிமக் கலப்பற்ற உப்புகள் (inorganic salts), நொதிகள் (enzymes) சர்க்கரை, கரிமக் கலப்புள்ள அமிலங்கள் (organic acids) முதலான பல பொருள்கள் உள்ளன. உள்ளே நுழையும் நீர் குமிழியை அமுக்குதலால் (turgor pressure) உயிரணு விரிவடையும். நுண் இழை அல்லது கோல் உருவான மைட்டோகாண்ட்ரியா (mitochondria) என்ற பொருள்களும் உயிர்த்தாதுவில் காணப்படு கின்றன. இவை லிபோபுரொட்டின்களால் ஆனவை. காளான் வகைத் தாவரங்களில் இவை தென்படுகின்றன. உருவத்தில் நுண்மம் (bacteria) போன்று இருக்கின்றன என ஒருவாறு கூறலாம். இவற்றின் தொழில் என்ன என்று தெரியவில்லே. பச்சையம் உள்ள உயிரணுக்களில் கணிகம் (plastid) செய்யும் வேலையைப் பச்சையம் இல்லாத உயிரணுக்களில் இவை மேற் கொள்ளும் என்பாரும் உளர். உயிர்த்தாதுவில் ரிபோ உட்கரு <sufisoih (ribo-nucleic acid) @05##96örpgil- @cozi RNA grørås குறிப்பிடுவர். இது உயிரணுச் செயல்களில் பங்கு கொள்ளும். உயிரணுவில் நிலையாக உள்ள உறுப்புகள் கணிகங்கள் (plastids) ஆகும். இவை உயிரணுவின் மிக இளைய நிலையிலிருந்தே நுண்ணிய மணி உருவாகக் காணப்படுகின்றன. இவற்றை மைட்டோகாண்ட்ரியாவாக மயங்கிக் கருத நேரும். கணிகம் ஒரு லிபோபுரொட்டின் ; இது, நிறமற்ற வெண்கணிகம் (leucoplast), பச்சையான பசுங்கணிகம் (chloroplast), பலநிறமான வண்ணக் கணிகம் (chromoplast) என மூவகையாகக் காணப்படும். வெண் கணிகத்தைச் சுற்றிப் புதிய மாப்பொருள்கள் ஒட்டிக்கொள்ளும். பகங்கணிகம் இருபுறம் குவிந்த லென்சு (lens) போன்றது. மிக நுண்ணிய புரொட்டீன் வகையான லிப்பாயிடு (lipoid) அணுக் கஜனப் பெற்றுப் பச்சையமாக (chlorophyll) இருக்கும். பச்சையத் துடன் பசுநீல நிறமுள்ள அணுக்கள் மிகுந்துள்ளபடியால் பசுங் கனிகம் பசுநீல நிறமாக இருக்கும். செந்நிறப் பாசிகளில் உள்ள பகங்கணிகம் செவ்வண்ண அணுக்களே மிகுதியாகப் பெற்றுச் செந்நிறமாகத் தோன்றும். இவ்வாறு பல நிறங்களேயுடைய பசுங் கணிகத்தையே வண்ணக் கணிகம் (chromoplast) என்று கூறுவர். பாசித் தாவரங்களில் பசுங் கணிகத்தைச் சுற்றி மாவு மணிகள் (starch grains) 1665&uro elo-såg. 6ơolufigɔu?@ (pyrenoid) 6r 6örp சேமிப்பு உணவாக இருக்கும். Lágosuth a (chlorophyll a), uéopouth b (chlorophyll b), கரோட்டின் (carotin), ஸாந்தோபில் (xanthophyll) என நான்கு வகைப்படும்.