பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தாவரம்-வாழ்வும் வரலாறும் பச்சைய அணுக்கள் வெளியிலும் கொண்டு அமைந்திருப்பதாகக் கூறுவர். மற்றுஞ் சிலர் கிரான (grana) என்ற நிறமற்ற நடுப் பகுதியின் புறத்தில் பச்சைநிற அனுமூலங்கள் சூழ்ந்திருப்பது தான் பச்சையம் (chloroplast) என்பர். இந்தக் கிரான என்பது லிசிதின்களால் (licithins) ஆகியதென்றும், இவை பச்சைநிற அனுமூலங்களே நீர்ப்பொருளால் பிணைத்துள என்றும் சிலர் கூறுகின்றனர். பச்சையத்தில் படும் ஒளி இரட்டைக் கதிர் மாற்றம் (double refraction) செய்வது பச்சையத்தின் அமைப்பைப் பொறுத்துள்ளது. sausärs réscssofsh (Chromoplast) - சில பூவிதழ்களும், பழங்களும் பல நிறமாக இருப்பதற்குக் காரணம் இந்த வண்ணக் கணிகங்கள் ஆகும். இவை பலவண் ண மானவை. பல நிறமான பாசிகள் அவ்வகை நிறம் பெற்றிருப்பதும் இந்தக் கணிகங்கள் மிகுந்து இருப்பதால்தான். இவைகளும் உயிர்ப் பொருள்களாகும். பசுங்கணிகத்தை ஒத்த உருவ முடையன . @susisressorsflasih (Leucoplast) இவை நிறமற்றவை ; உயிர்த்தாதுவில் முதலில் தோன்றுவன ; பச்சையம் ஆக்கும் உணவைத் தம்பால் சேர்த்துவைக்கும் இயல் புடையன. இவையே சில சமயங்களில் பசுங்கணிகங்களாகவும் பின்னர் வண்ணக் கணிகங்களாகவும் மாறுவதை சீமைத்தக் காளி ustab (lycopersicum esculentum) srsvarsoirth. @45 gör sriċi Gerrih பிஞ்சாக இருக்கும்போது வெண்மையாகவும், முற்றிக் காயாக இருக்கும்போது பச்சையாகவும், பழுத்துப் பழமாக இருக்கும்போது சிவப்பாகவும் மாறுவதை நாம் அறிவோம். வெண்கணிகம் மிகச் சிறிய உயிர்ப்பொருள். உருண்டை அல்லது முட்டை வடிவானது; 6 முதல் 10 (மைக்ரான்) அகலமுள்ளது ; பரம்பரைத் தொடர் புடையது ; தாகைத் தோன் ருது.

  • —to-so (Nucleus)

உயிரணுவில் பொதுவாக உட்கரு ஒன்று இருக்கும். காளான் களிலும், இனப்பெருக்கஞ் செய்யும் சில உறுப்புகளிலும் உட்கரு அதிகமாக இருப்பதுண்டு. வாச்சிரியா (Vaucheria) முதலிய பாசிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறு உட்கரு காணப்படும். நுண்ணங்களிலும், பசு நீலப் பாசிகளிலும், பிற தாவர உயிருணவில் இருப்பது போன்ற உட்கரு காணப்படவில்லே. ஆல்ை, இவற்றில் உட்கருப் பொருள்கள் உள்ளன என்பர். உயிரணுவின் உயிர்த்