பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தாவரம்-வாழ்வும் வரலாறும் அமிலங்கள் டார்டாரிக் அமிலம் (tartaric acid), ஆக்சாலிக் அமிலம் (oxalic acid), lost 683, selforh (malic acid) (p.56&n 35 flu suffabri, 35 goth, பாமிட்டிக் அமிலம் (palmitic acid), ஸ்டீரிக் (stearic) அமிலம், ஒலிக் (oleic) அமிலம் முதலிய கொழுப்பு அமிலங்களும் உயிர்த்தாதுவில் உள்ளன. ஏனைய திரவப் பொருள்கள் பூவிதழ்களும், சில இலகளும் பல நிறம் பெற்றுள்ளன. இவற்றின் உயிரணுச் சாற்றில் ஆந்தோசையனின் (anthocyanin) என்ற வேதிப் பொருள் கரைந்திருப்பதால் பல நிறங்கள் தோன்றும். ஆர்க்கிடுவின் கிழங்கிலும், நரிவெங்காயம் (urginia), வெங்காயம் (allium cepa) முதலானவற்றின் சதைப்பற்ருன இலேகளிலும் மியுசிலேஜ் (mucillage) காணப்படுகின்றது. பல மரப்பட்டை களிலும், வாழைப் பட்டையிலும் டானின் (tamin) உண்டாகின்றது. விதை மூடாத் தாவரங்களிலும், சில பூக்கும் மரத்தண்டிலும் குங்கி லியம் (resin) கசிகின்றது. யூகாலிப்டஸ், நாரத்தை, இஞ்சி (zingiber) முதலியவற்றில் எண்ணெய்கள் சுரக்கின்றன. நிபெந்திஸ் (nepenthes) முதலிய பூச்சியுண்ணும் தாவரங்களில் நச்சு நீர் உண்டாகின்றது. இலுப்பை, வேம்பு, ஆல், கள்ளி, pij 60ur (hevea) முதலிய மரங்களில் பால் (latex) வடிகின்றது. இவையனைத்தும் உயிர்த்தாதுவில் காணப்படும் உயிரில்லாத திரவப் பொருள்களே ஆகும். கட்டியான பொருள்கள் (Solids) உயிர்த்தாதுவில் மிக நுண்ணிய துரள்களும் விரவி உள்ளன. அவை கார்போஹைடிரேட்டுகளும், புரொட்டீன்களும், கிரிஸ்டல் படிகங்களும் (crystals) ஆகும். கார்போஹைடிரேட்டுகள் சருக் கரைகள் (sugar) என்றும், சருக்கரை அல்லாதன (non sugars) என்றும் இருவகைப்படும். புரொட்டீன் களில் சாதாரண புரொட்டின்கள்(simple proteins), இணைந்த புரொட்டீன்கள் (conjugated.proteins), ஹைடிரோலேஸ்டு புரொட்டின்கள் (hydrolised proteins) என மூவினம் உண்டு. ஒவ்வொன்றிலும் பல வகைகள் இருக்கின்றன. ஸ்டார்ச்சுப் படிகங்கள் (crystals) உருளேக்கிழங்கு, சோளம், அரிசி முதலிய வற்றில் சேமித்த உணவாக உயிரணுவில் இருக்கின்றன. உயிரணு விற்கு வேண்டாக சில பொருள்கள் பலவடிவான படிகங்களாகி இருப்பதுண்டு.