பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தாவரம்-வாழ்வும் வரலாறும் கண்டு சொன்னவர் ராபர்ட் பிரெளன் (Robert Brown). இதில் மூலக்கூறு அளவான பொருள்கள் கரைந்து ஊடுபரவும் (diffusion) போது காணப்படும் இயக்கம் வேறு. இதனேக் கூழ்நிலேப்பொருள் இயக்கத்தினின்றும் வேறுபடுத்த வேண்டும். கூழ்நிலேப்பொருள் இயக்கத்தைப் பிரெளனியன் இயக்கம் (Brownian movement) என்பர். இதற்குக் கூழ்நிலைப்பொருள்கள் 2 முதல் 4 (A) மைக்ரான் அளவினதாக இருக்கவேண்டும். அதற்கு மேற்பட்ட அளவுள்ள பொருள்கள் நீரில் கரைந்திருந்தால் இவ் வியக்கம் உண்டாகாது. உயிர்த்தாதுவில் மேற்பரப்பு இழுவிசை (surface tension) என்ற மற்ருெரு இயல்பும் காணப்படுகின்றது. இவ்வியல்பு உயிர்ச் செயல்கள் பலவற்றிற்கும் மூல காரண்ம் என்பர். உயிரணுப் பகுப்பு, சவ்வூடுபரவல், உயிர்த்தாதுவின் இயக்கம் முதலியன மேற்பரப்பு இழுவிசைத் துணையால் நிகழ்கின்றன. கூழ்நிலைப் பொருள் தன்மையால் - பெருகிய இடம் அதிக நீரை ஏற்றுக் கொண்டு மேற்பரப்பு இழுவிசைக்குச் சக்தி தரும் என்பர். இதுபோல உயிர்த்தாதுவிற்குப் பாகுநிலை (viscosity) போன்ற ஜெல் இயல்புகளும், பல மின்சார, காந்த இயல்புகளும் இருக் &65rpoor (electro-kinetic and electro-magnetic). உயிர்த்தாதுவின் இயக்கம் சாதாரணமாக நுண்ணுேக்கியில் (microscope) கண்ணுக்குப் புலகுைம். வெண்கணிகங்களும், பசுங்கணிகங்களும் விரைவாக ஊர்ந்து நகர்வதை முறையே பரங்கிப் புறத்தோலில் உள்ள மயிர்களிலும், வேலம்பாசி (hydrilla) இ&லயிலும் காணலாம். இவ்வியக்கம் நீர்வாழ்த் தாவரங்களில் ஒரே முகமாகவும், நிலத்தாவரங்களில் பலமுகமாகவும் இருக் கிறது. இதற்குக் காரணம் உயிர்த்தாதுவின் இயக்கமே யாம். அதில் மிதக்கும் கணிகங்கள் உயிர்த்தாது நகரும்போது நகர்வது கண்ணுக்குத் தெரியும். உயிர்த்தாதுவின் அமைப்பைப்பற்றிய சில கொள்கைகள் உயிர்த்தாதுவின் அமைப்பைக் கண்டறிந்த அறிஞர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்ட கருத்துடையவர்களாக இருக் கின்றனர். ஒவ்வொருவரும் தாம் கண்ட உண்மையைத்தான் கூறுவர். எனினும் குருடர் யானேயைக் கண்ட கதையாகவே இருக்கின்றது உயிர்த்தாதுவின் அமைப்பு. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.