பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தாவரம்-வாழ்வும் வரலாறும் ரெசீன்கள், கொழுப்பு, எண்ணெய் முதலிய கூட்டுப்பொருள்கள் உயிர்ப் பொருள்களில் கிடைக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றண்டின் தொடக்கத்திலிருந்து நைட்ரஜன் கூடிய புரொட் டீன்களே உயிர்களுக்கு மூலப்பொருள் என்று தெரியவந்தது. புரொட்டீன்களெல்லாம் பலவகையான அமிளுே அமிலங்களால் ஆக்கப்பட்டுள்ளன. இவை, அமிலமும் காரமும் கலந்த கூட்டுப் பொருள் ஆகும். புரொட்டீன்களில் சுமார் 22 வகையான அமிகுே அமிலங்கள் பலப்பல வகையாக அமைந்துள்ளன. உதாரணமாக, இன்சுலின் (insulin) என்பது விலங்குகளில் எடுக்கப்படுகின்ற ஒரு புரோட்டீன். இதில் 15 வகைப்பட்ட 51 அமிளுே அமிலங்கள் இரு தொடராக அமைந்துள்ளன. இவற்றில் ஒர் அமினே அமிலம் இல்லாவிட்டாலும், மாறி அமைந்தாலும் இன்சுலின் இயல்பு கெட்டு விடும். நன்ருகத் தூய்மை செய்யப்பட்ட புரொட்டின்கள் ஒரே அளவுள்ள மூலக்கூறுகளேப் பெற்றுள்ளன. ஒவ்வொரு மூலக் கூறிலும் அதே அமினே அமிலங்கள், அதே வரிசையில் அமைக்கப் பெறும் என்பதாயிற்று. உயிரற்ற புரொட்டீன்களே நீண்ட சங்கிலித் தொடராக அமைக்கக்கூடிய இயல்பு உயிர்ப்பொருள் களுக்கு உண்டு. இவ் வல்லபம் உயிர்வாழ்விற்கு மூலப்பண்பு ஆகும. தாவர உயிர்கள் தமது உணவைத் தாமே ஆக்குகின்றன. காற்றிலுள்ள கரி, வளி, நீர், கரிமக் கலப்பற்ற சத்துப் பொருள்கள் இவற்றைக்கொண்டு சூரிய சக்தியால் சர்க்கரைப் பொருள்களேயும் புரொட்டீன்களேயும் தயாரிக்கின்றன. இவ்வுணவுப் பொருள்களே வேதிமாற்றமான ஆக்சீகரணம் (oxidation) மூலம் உயிர் வாழ்விற்கு வேண்டிய சக்தியாக மாற்றுகின்றன. இவ்வாறு மாற்றும்போது மிகப்பெருஞ் சக்தியுள்ள பாஸ்பேட்டுக் கூட்டுப் பொருள்கள் உண்டாகும். வேதிமாற்றங்களேத் துரிதப்படுத்துவதற்குச் சில பொருள்கள் துணைபுரியும். அவை ஊக்கிகள் (catalysts) எனப்படும். உயிர்களில் வேதி மாற்றத்தை எளிதில் உண்டுபண்ணும் இவற்றை உயிர் ஊக்கிகள் (bio-catalysts) groorgoth, 6 sprälä sii (enzymes) or 53rg), h on-spoon th: உயிர்ப் பொருள்கள் எண்ணற்ற என்சைம்களைப் (நொதிகளே) பெற்றுள்ளன. அமினே அமிலங்களே அமைத்துக்கொள்ளும் புரொட்டின் பண்பைப் பயன்படுத்தி உயிர்ப்பொருள்கள் மிக நுண்ணிய புரொட்டீன்களேயே பல வகையான நொதிகளாக அமைத்துக்கொள்ளக்கூடும் எனவும், இந்த நொதிகளே ஆக்சி கரணம்மூலம் கூட்டுப்பொருள்களே ப் பிளந்து பெருஞ்சக்தியை உண்டாக்கும் எனவும், இச் சக்தியைக்கொண்டு உயிர்த்தொழில்