பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தாவரம்-வாழ்வும் வரலாறும் நிலேயில் சருக்கரைப் பொருள்களிடமிருந்து மாறிய பாஸ்பேட்டுக் கூட்டுப்பொருள்களுடன் அமினே அமிலங்கள் இனேந்து செயற் படும். ஒவ்வோர் அமினே அமிலமும் தனக்குரிய நொதி ஒன்றையும் பெற்றுள்ளது. இந்த நொதி RNAவுடன் அமினே அமிலங்கள் பொருந்தி செயற்படத் துரண்டும். இவ்விரு நிலைகளில் பாஸ்பேட்டுக் கூட்டுப்பொருள்கள், அமினே அமிலங்கள் RNA முதலிய எல்லாம், பலவகை மாற்றங்களேப் பெற்றுப் புரொட் டீன்கள் ஆகின்றன. உயிரணுவில் உயிர்த்தொழில்களுக்கு வேண்டிய மூலப்பொருள்களே உண்டுபண்ணுவதால் இச் செயல் உயிரணுவின் தொழில்களில் நடுநாயகமாக இருக்கிறது. உயிரணுவில் உள்ள மைட்டோ காண்ட்ரியா (mitochondria) பெரும்பாலும் விலங்குயிரணுக்களில் மிகுந்து காணப்படும். தாவர உயிரணுவில் இதற்குக் காண்ட்ரியோம்(chondriome) என்று பெயர். உயிரணுவில் நிகழும் ஆக்சிகரணத்துக்கு வேண்டிய நொதிகள் காண்ட்ரியோமில் பொதிந்துள்ளன. உண்மையில் இவைகள் அணுச்சக்திக் கூடங்கள் ஆகும். எலெக்ட்ரான் நுண்ணுேக்கி (electron microscope) மூலம் காணும்போது இவற்றுள்ளே ஒரு சவ்வு அமைப்புத் தெரியவரும். இதைக்கொண்டு நொதி நிகழ்ச்சிகள் கட்டுப்பாட்டுடன் ஒழுங்காக நடக்கின்றன என்பர். உயிரணுப் பகுப்பு காரா (chara) என்ற தாழ்வகைத் தாவரத்தில் உயிரணுப் பகுப்பு மிக எளிய முறையில் நடைபெறுகின்றது. இதன் கணு விடையில் உள்ள உயிரணுக்கள் நேர்முகப் பகுப்பு (direct nuclear division or amitosis) (popu?i Lof figy 616 top th: @5, வுயிரணுக்களில் உள்ள உட்கருவின் நடுவில் ஓர் இறுக்கம் (constriction) உண்டாகித் துண்டித்துவிடும். பகிர்ந்த உட்கருத் துண்டுகள் தனித் தனி உயிரணுக்களாகி விடும். கள், மோர், இட்டவிமா (இட்லி) முதலியவை புளிப்பேறுவ தற்குக் காரணமான நுண்மம் போன்ற ஈஸ்டு (yeast) என்னும் காளான் வகைத் தாவரங்கள் அரும்புதல் (budding) என்னும் பகுப்பு முறைப்படி பிரிந்து பெருகும். இவை ஒற்றை உயிரணுக் களால் ஆனவை. இதன் உயிரணுச் சுவர் ஒன்று அல்லது பல இடங்களில் அரும்புகளே வெளிப்புறமாய்க் கட்டும். இதற்கும் உட் கருவின் ஒரு பகுதி பகிர்ந்து அரும்புக்குள் செல்லும். உயிரணுச் சுவரின் இறுக்கமும் நெருங்கி, இம்முறையில் உயிரணுப் பகுப்பு மிக விரைவாக நடப்பதை நுண்ணுேக்கி வழியாகப் பார்க்கலாம்.