பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை -- தாவரவியலைத் தமிழில் தெளிவாக எழுதும்படி தமிழ் வெளியிட்டுக் கழகத்தார் என்னை மூன்றண்டுகட்கு முன்னர் பணித்தனர். அதனல் யான் தாவரம்-வாழ்வும் வரலாறும் ? (Plants–Life and History) Grgör so prób grap:5$ 35&důLLGL–6ör. இந் நூலின் முதற்பாகமாகிய இதனுள் பூக்குந் தாவரங்களின் அமைப்பியலும் குடும்பவியலும் அமைந்தன. அமைப்பியலுள் greur GlsusifiugounůLỊth (Morpology), 2-6h 6irsotniil juh (Histology), உயிரணுவியலும் (Cytology) அடங்கியுள்ளன. பொதுவாக B.Sc., பாடத் திட்டங்களேக் கருத்திற்கொண்டு, இயன்றமட்டில் தமிழ்நாட்டில் வளரும் தாவரங்களே மேற்கோளாக வைத்து, தாவரப் பேரறிஞர்கள் இதுகாறும் கண்டு சொன்ன உண்மைகளைத் தொகுத்து இந்நூல் செய்தனன். இது எந்த ஒரு தனி நூலின் மொழிபெயர்ப்புமன்று. எனினும், பல தாவர நூல்களில் உள்ள கருத்துரைகள் இதனுள் காணப்படும். நல் லறிஞர்கள் நாள் தோறும் நுணுகி ஆராய்ந்து கூறும் தாவர நுட்பங் களும் இதனுள் ஏற்ற இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன. இயற்கை விஞ்ஞானத்தை விளக்குவதற்கு நல்ல படங்கள் இன்றி யமையாதவை. இதன்கண் பல படங்கள் சேர்ந்திருப்பது நூலின் தனிச் சிறப்பாகும். # விஞ்ஞானக் கருத்துகளைத் தமிழில் நன்ற க வெளிப்படுத்த முடிகிறது. ஆதலின் அவற்றை எளிதில் அறிந்துகொள்ளவுங் கூடும். ஆகவே, இந் நூல், மாணவர்கட்கும் மற்றையோர்க்கும் பெரிதும் பயன்படும் என்று நம்புகின்றேன். - தமிழில் வழங்கிவரும் விஞ்ஞான சொற்களேயும், நமது அரசினர் வெளியிட்டுள்ள சில தாவரவியல் சொற்களேயும் அப்படியே ஆண்டுள்ளேன். இப் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் ஆசிரியர்கள் சில ஆண்டுகட்கு முன்னர் உருவாக்கிய தாவர் வியல் சொற்கள் பெரிதும் இதில் இடம்பெற்றன. இன்றி யமையாதவிடங்களில் தாவரப் பெயர்ச் சொற்கள், தாவர உலக விதிகட்கேற்ப ஆங்கிலத்திலேயே சேர்க்கப்பெற்றுள்ளன. வேண்டுழியெல்லாம் புதுச் சொற்கள் புனேய நேர்ந்தது. இதற்கு இலங்கை அரசினர் வெளியீடுகளும் சென்னைத் தமிழ்ச் சங்கத்தின் சொற்ருெகுதியும் துணை நின்றன.