பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தாவரம்-வாழ்வும் வரலாறும் யின் வளர் உயிரணுவில் 22 வண்ணத் துண்டுகள் இருக்கின்றன. அதே குன்றிக் கொடியிலோ, அல்லது வேறெந்தக் குன்றிக் கொடியிலோ எந்த ஆக்குதசை உயிரணுவைச் சோதித்த போதிலும் இதே வலே வண்ணத் துண்டுகள்தான் நிறைந்திருக்கும். தாவர, விலங்கு உயிர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு வண்ணத் துண்டு எண்ணிக்கை உண்டு. உதாரணமாக, கடலேயில் 16, பட்டாணி யில் 14, வேர்க்கடலேயில் 40, அத்தியில் 24, கொத்தவரையில் 14, துவரையில் 22, அவரையில் 24, பச்சைப்பயிற்றில் 22, உளுந்தில் 24 வண்ணத் துண்டுகள் அமைந்துள்ளன. இ வ. ற் ைற 2.x எண்ணிக்கை என்பர். இதற்கிடையில் உயிரணுவின் இரு எதிர் முனேகளிலிருந்தும் பல இழைபோன்ற உயிர்த்தாதுச் சரடுகள் தோன்றுகின்றன. உண்மையில் இவை உயிர்த்தாதுவின் தடிப்பேயாகும். இவை உள்ளணுவின் நடுப் பகுதிக்கு வரும்பொழுது அகன்று விரிந்து அங்குக் குவிந்துள்ள வண்ணத் துண்டுகளோடு ஒட்டிக்கொள்ளும். இந்நிலைமையை மெடாபேஸ்’ (metaphase) என்பர். இந்நிலையில் தான் வண்ணத் துண்டுகளே எதிர்முனேகளிலிருந்து (polar view) எண்ணி அளவிடமுடியம். பக்கமாக (side view) இருந்து எண்ண முடியாது. அடுத்த நிலேயில் ஒவ்வொரு வண்ணத் துண்டின் இரு நீள் பாதிகளும், ஆதியில் தோன்றிய பிளப்பின் வழியாகப் பிரிந்து இந்த உயிர்த்தாதுச் சரடுகளால் இரு எதிர் முனைகளுக்குமாக இழுக்கப் படுகின்றன. ஒவ்வோர் அனுக்கோலிலும் ஒரு பாதி ஒரு முனையையும் மற்றெரு பாதி எதிர் முனையையும் அடைகின்றது. இந்தப் பகுப்பு முறைகளில்ை இரு முனைகளிலும் ஒரே எண்ணிக்கை யான வண்ணத் துண்டுகள் (பாதிகள்) இருக்கும். இந்த நிலையில் வண்ணத் துண்டுகளேயும், அவற்றைப் பற்றியுள்ள உயிர்த்தாதுச் சரடுகளேயும் பக்கவாட்டில் பார்த்தால் நூற்கண்டு (spindle) போலக் காட்சியளிக்கும். இந்நிலை அனபேஸ் (anaphase) எனப் படும். இங்ங்னம் பிரிந்த வண்ணத் துண்டின் பாதிகள் இரு முனை களுக்கும் ஊர்ந்து நகர்வதைப்பற்றிப் பல கொள்கைகள் உள்ளன. பொதுவாக உயிர்த்தாதுச் சரடுகள் இறுகிப்போவதால் இவற்றின் நீளம் குறைந்து, இவற்றில் ஒட்டியிருக்கும் வண்ணத் துண்டுப் பாதிகளைத் தத்தம் முனேகளுக்கு (poles) இழுத்துக்கொள்ளும் என்பர். உயிர்த்தாதுச் சரடுகள் தம் முனேகளுக்கு வண்ணத் துண்டுகளே இழுப்பதாலும் (pulling), வண்ணத் துண்டுகள்