பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தாவரம்-வாழ்வும் வரலாறும் ஒவ்வொன்றிலும் அமைந்துள்ள கைனிடோகோர் (kinetochore) தன் இயல்பால் இரு பாதிகளையும் பிரித்து எதிர்முகமாகத் தள்ளுவதாலும் (pushing) இவை நகர்கின்றன என்று பலர் கூறுவர். இந்நிலையில் உட்கருவின் நடுவே வண்ணத் துண்டுத் தொகுதி களுக்கிடையில் உயிர்த்தாது ஒரு பிரிசுவர் அமைக்கும். இந்த நிலேக்கு உலோபேஸ் (telophase) என்று பெயர். பிரிசுவர் இரு தொகுதிகளேயும் மூடி உயிரணுச்சுவராகும். இதற்கிடையில் உட் கருவணு ஒவ்வொன்றிலும் தோன்றிவிடும். வண்ணத் துண்டுகள் திரும்பவும் வண்ண வலேப் பின்னலாக மாறிவிடும். இங்ங்ன மாக ஓர் உயிரணு பகிர்ந்து இரு உயிரணுக்களாகின்றன. இஃதல்லாமல் இனம் பெருக்கும் உயிரணுக்களில் காணப்படும் குன்றல் பகுப்பு முறையைப் (reduction divison) பின்பு காண் போம். எனினும், வண்ணத்துண்டுகளின் அமைப்பைச் சிறிது அறிந்து கொள்ளுதல் வேண்டும். உயிர்களின் எல்லா இயல்புகளும் அவ்வுயிர்களுக்குரிய வண்ணத் துண்டுகளில் அமைந்துள்ளன. ஒரு வண்ணத் துண்டில் எத்தனையோ ஜீன்கள் (genes) உள்ளன. ஒவ்வொரு ஜீனிலும் ஒன்று அல்லது பல இயல்புகள் பொருந்தி யிருக்கும். இவ்வியல்புகளேத் தலேமுறை தலைமுறையாக உயிர் களில் தொடர்ந்து தாங்கிக்கொண்டுவரும் இவ் வண்ணத் துண்டுகள் ஒமப்பொடிபோலக் காணப்படுகின்றன. susoror:#351sor(S (Chromosome) வடிராடர் (Schrader) காட்டியபடி வண்ணத் துண்டின் அமைப்புப் பின்வருமாறு : வண்ணத் துண்டின் நுனியில் ஒரு பகுதி ஒட்டவைத்தாற் போல இருபுறத்திலும் சற்று உள்ளமுங்கித் தோன்றும். அதற்குள் இருக்கும் கைனிடோகோர் (kinetochore) என்ற உறுப்பு, வண்ணத் துண்டின் நடுவே இரு நுனிவரை நீண்ட இரு இழைகள் ஒன்ருே டொன்று பின்னிக்கொண்டுள்ளன. இழைகளின் எண்ணிக்கை இன்னும் முடிவாகத் தெரியவில்லை. இழைகளை ஜினேனிமா (genomema) அல்லது குரோமோநீமா என்பர். இதில் ஜீன் (gene) என்ற இயல்பு தாங்கும் நுண்ணனுக்கள் அமைந்துள்ளன. வண்ணத் துண்டின் பெரும்பகுதி இவற்றைச் சுற்றியுள்ளன. வண்ணத் துண்டுக்கு மூடி போட்டதுபோல வெளிப்புறத்தில் ஒர் உறை (pellicle) அமைந்துள்ளது (படம் 21).