பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாவரங்களின் வெளியமைப்பு வேர் விதை முளேக்கும்பொழுது முதலில் வெளிப்படுவது வேர். முளே தான் நீண்டு வளர்ந்து வேராகும். வேர்கள் எல்லாம் புவியீர்ப் புக்குக் (gravity) கட்டுப்பட்டுக் கீழ்நோக்கி வளர்கின்றன. இவை நால்வகையான தொழில்களே மேற்கொண்டு செடிக்கு உதவும். தாவரத்தை அதேயிடத்தில், அஃதாவது அது வளர்ந்த இடத்தில் நங்கூரம் போல் பிணித்துக்கொண்டு எளிதில் சாயாமல் நகராமல் நிலேக்கச் செய்தல் ஒன்று. இதல்ை மரம், செடி, கொடி முதலான எல்லா நிலேத்தினேப் பொருள்களும் தாவரம் என்ற பெயர் பெற்றன. நிலத்திலிருந்து நீரைப் பலவகையான உப்புகளுடன் உறிஞ்சுதல் வேரின் இரண்டாவது செயல். உறிஞ்சிய நீரைத் தண்டுக்கு அனுப்ப வழியாக இருத்தல் மற்ருெரு முக்கியமான செயல். உணவுப் பொருள்களே ச் சேமித்து வைப்பதற்குப் பல தாவரங்களில் உறைவிடமாக இருப்பது வேர்களேயாகும். வளர்ந்துவரும் இள வேரைக் கூர்ந்துபார்த்தால் நான்கு பகுதிகள் தெரியும். நுனியில் வேர்மூடி (rootcap) இருக்கிறது. மண்ணில் பலவகைப்பட்ட பொருள்களிடையே நுழைந்து செல்லும் பொழுது நுனி தேய்ந்து கெடாதிருக்க வேர் நுனியில் உள்ள வேர் மூடி காத்து நிற்கும். அதற்கு மேல் (படம் 22) உயிரணுப் பகுப்பு மிகத் துரிதமாக நிகழும் இடம் உள்ளது. அதற்கு மேல் வேர் நீளுமிடம் தென்படும். உயிரணுக்கள் பலவாகப் பகுக்கப்பட்டுப் பெருகும்பொழுது வேர் நீண்டு வளர்வது இவ்விடத்தில்தான். இதற்குமேல் வேர்த்துாவி மலிந்து காணப்படும். இவை 0.01 m.m. பருமனும், 10 m.m. நீளமும் பெற்றுப் புறத்தோலில் உள்ள உயி ரணுக்களின் பாகமாக உள்ளன. அன்றி, இவை நிலத்தில் இருந்து நேரடியாக நீரை உறிஞ்சுகின்றன. இதற்கும் மேலேயுள்ள வேர்ப் பகுதியில் வேர் முதிர்தலும் உயிரணுக்களின் செயலுக்கேற்ப வேறுபட்டு அமைதலும் காணப்படும்.