பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தாவரம்-வாழ்வும் வரலாறும் வேர்த்துாவி உண்டாகும். இவற்றின் பரப்பு ஒருசில செடியில் ஆயிரக்கணக்கான சதுர அடிகளாகப் பரந்திருத்தல் விளங்கும். 7. மூலவேர் நீண்டு வளரும்போது பக்க வேர்கள் கிளேக்கும். இவை வேரின் உட்பகுதியிலிருந்து வெளிப்படுகின்றன. வேர்கள் இருவகைப்படும். மூலவேரும் (primary root) அதன் பகுதிகளும் வித்திலிருந்து தோன்றி, தாவரம் உயிர் வாழ்கின்ற வரையில் இருக்கும். இவைகளெல்லாம் தண்டின் அடிப்புறத்தில் தோன்றி நிலத்தில் உள்ளன. இலையிலிருந்தும், கிளேகளிலிருந்தும், அடிமரத்திலிருந்தும் வேர்கள் உண்டாகலாம். அவற்றை வேறிடத்துப் பிறந்த வேர் (adventitious roots) என்பர். மூலவேர் (ஆணிவேர்) பெரிதும் இருவிதையிலேத் தாவரங்களில் நேராகவும் ஆழமாகவும் நீண்டு வளரும். பக்க வேர்கள் இதைச் சுற்றிக் கிளேத்து நிலத்தில் ஊடுருவிச் செல்லும். பக்க வேரில் கிளேக்கும் சிறு வேர்கள் சல்லி வேர்கள் எனப்படும். வேர்த் தொகுதி நீரை நாடி வெகுதுாரம் வளர்தலும் உண்டு. ஆலமரத்தின் கிளேகளிலிருந்து உண்டாகிக் கீழ்நோக்கி வளரும் விழுதுகள் நிலத்தில் ஊன்றிக் கிளைகளைத் தாங்கி வேர்த் தொழில் புரியும். இவை தாங்கு வேர் (prop root) எனப்படும். ஒர் ஆலமரம் சுமார் 200 ஆண்டுகளாகக் கல்கத்தாவில் உள்ள தாவரத் தோட்டத்தில் இருக்கின்றது. அதில் கிட்டத்தட்ட சுமார் 800 தாங்கு வேர்கள் உள்ளன. தாய்மரம் இறந்துபட்டாலும் தாங்கு வேர்களேக்கொண்டு மற்றப் பகுதிகள் உயிர் வாழும். தாழையிலும், GrL16ör &prust grih (rhizophora) தண்டைச் சுற்றி வேர்கள் உண்டாகி, நாலாப் பக்கத்திலும் ஊன்றி நின்று, தாவரம் அசையாமல் பாதுகாக்கின்றன. அசையாமல் நிற்பதற்குக் கயிறு கட்டுவது போன்று இவ் வேர்கள் இருப்பதால் இவை ஊன்று வேர் (stilt root) எனப் படும் (படம் 23-1).

இரணக் கள்ளியிலே வளைவு பல் விளிம்புடையது என்று முன்பு கண்டோம். இதை ஒரு நூலில் கட்டித் தொங்கவிட்டால் பல் விளிம்பில் சிறு வேர்கள் தோன்றிக் குருத்துவிடும். வேர்கஜன் இலை வேர் எனவும், குருத்தை இலேக்குருத்து எனவும் கூறலாம். பெகோனியா (begonia) என்ற யானேக் காது இலையும் இத்தகைய வேர் விடும் (படம் 23-3).