பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 32. சாரசீனியா (பூச்சியுண்ணுஞ் செடி) வரும் பூச்சிகள் தப்பிச் செல்வதில்லை. பையின் உள்ளே விழுந்தவை நச்சு நீரில் அழிந்துவிடும். இச் செடியில் உள்ள நச்சு நீரில் மழை நீரும் கலந்திருப்பதால் இதில் விழுந்த பூச்சிகள் உடனே இறப்பதில்லே. இப் பூச்சிகள் மேலே ஏறிவர முயலும் பொழுது இந்தப் பையின் சுவரில் உள்ள கூரிய முட்களால் குத்தப் பட்டு மயங்கித் திரும்பவும் நச்சு நீரில் விழும். சில மணி நேரத் தில் அவை இந் நீரில் கரைந்து உணவாகிவிடும். டார்லின்டோனியாவில் (darlintonia) இலே நுனி பாம்புப் படம் போன்றிருக்கும் (படம் - 33). மற்ற அமைப்புகள் பெரிதும் சார சீனியாவை ஒத்துள்ளன. foL5&sio (nepenthes) storsp griq-3, 6,414 (pitcher plant) மிக அழகாக இருக்கும். மடகாஸ்கர், நியூகினி (New Guinea), இலங்கை, போர்னியா (Bornea) முதலிய இடங்களில் இது அதிக