பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8ல 77 இதற்கு ஒரு மணமும் உண்டு. ஜாடியின் வாய்ப்புறத்து அழகாலும் மணத்தாலும் மயங்கும் சிறு பூச்சிகளுக்கு அளவில்லை. வாய் விளிம்பில் வந்த பூச்சிகள் தப்பிப்போக முடியாது. இப் பூச்சிகள் ஜாடியுள் வழுக்கி விழுந்துவிடும். ஜாடியின் சுவர் வழியாக மேலேறி வர முயலும் பூச்சிகள், அதில் மலிந்துள்ள முட்களால் குத்தப்பட்டு மயங்கி நச்சு நீரில் விழும். ஜாடியின் அடியில் புரொட் உனேச் சேகரிக்கச் செய்யும் நச்சு நீர் உண்டாகிறது என்பர். ஆதலால் இப் பூச்சிகள் இந் நீரில் கரைந்து செடிக்கு உணவா கின்றன. -

பூச்சியுண்ணும் இத் தாவரங்களிலேயே வாழ்க்கை நடத்தும் சில பூச்சிகளேயும் காணலாம். எப்பொழுதாவது ஒரு சில சமயங் களில் இத் தாவரங்களேச் சுற்றி வாழ்வனவும், தம் வாழ்வின் ஒரு பகுதிக்கு ஏற்ற சூழ்நிலையை வேறிடமின்றி இத்தாவரங்களிடமாகக் கூட அமைத்துக்கொள்ளுவனவும், இத் தாவரங்களிடமாகவன்றி வேறிடத்தில் காண முடியாதனவும் என அப் பூச்சிகள் மூன்று வகைப்படும். படம் 35. டிராசீரா இலையின் சுரப்பிமயிர் 1. சாதாரண கிலே 2. பூச்சி பிடிக்கும் கிலை